மேலும் அறிய

DMK Alliance: 2021 Vs 2026 - கறாராக பேசி வேலையை முடித்த திமுக - ஆனாலும் நட்டம், எத்தனை தொகுதிகளில் உதயசூரியன்?

DMK Alliance TN Election 2026: திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில், எத்தனை தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

DMK Alliance TN Election 2026: சட்டப்படி தேர்தலை ஒட்டி கண்டிப்பான பேச்சுவார்த்தையின் மூலம், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது.

திமுக தொகுதிப் பங்கீடு நிறைவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இறுதிகட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக வரும் மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடங்குவதற்கு முன்பாகவே, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை, யாருக்கு எந்தெந்தந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் கறாராக பேச்சுவார்த்தை நடத்திய திமுக, பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும், கடந்த முறை ஒதுக்கியதை காட்டிலும் குறைவான தொகுதிகளையே இந்த முறை ஒதுக்கியுள்ளது. இதனால், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் திமுக இந்த முறை வேட்பாளர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 Vs 2026 - திமுக தொகுதிப் பங்கீடு

கட்சி 2021 ஒதுக்கிய தொகுதிகள் 2026 ஒதுக்கிய தொகுதிகள்
திமுக 173 168
காங்கிரஸ் 25 28
தேமுதிக  - 10
விடுதலை சிறுத்தை கட்சிகள் 6 8
இந்திய கம்யூனிஸ்ட் 6 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 5
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 6 (உதயசூரியன் சின்னம்) 4 (3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 (உதயசூரியன் சின்னம்) 2 (உதயசூரியன் சின்னம்)
மனிதநேய மக்கள் கட்சி 2 (உதயசூரியன் சின்னம்) 2 (உதயசூரியன் சின்னம்)
தமிழக வாழ்வுரிமை கட்சி 1 (உதயசூரியன் சின்னம்) கூட்டணியிலிருந்து விலகல்

திமுகவிற்கு எத்தனை தொகுதிகள்?

கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை காங்கிரசுக்கு கூடுதலாக 3 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒரு தொகுதி குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் மதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த முறை 3 தொகுதிகளில் உதயசூரியன், ஒரு தொகுதியில் தனிசின்னம் என மொத்தமே 4 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. கடந்த முறை போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வியுற்ற, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், அந்த எண்ணிக்கை அப்படியே நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக இன்னும் 168 தொகுதிகளை திமுக கைவசம் உள்ளன. அதிலிருந்து கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்புக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அனைவர்ம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. இதனால், 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதாவது கடந்த தேர்தலில் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 175 ஆக குறைந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget