மேலும் அறிய

மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்த உடன் என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 06.10.2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 04.10.2026 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-

(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி. எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

(3) பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

(4) தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 04.10.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

(5) கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.

(6)வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 04.10.2026 அன்று மாலை 6.00 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

(7) சட்டமன்றத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:-

(1) அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்

(ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் சட்டமன்றத்

(iii) தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

(iv) மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget