மேலும் அறிய

TVK Vijay: அரசியலில் முழுநேரம் உழைக்க வேண்டும்.. விஜய்க்கு நிதின் நபின் அட்வைஸ்!

எங்கள் கட்சி தற்போது அதிமுகவுடனான கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவுடனான கூட்டணி  செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு நன்றாக உள்ளது. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடக்கவில்லை என நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்கட்சியின் தேசிய செயலாளர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குகிறது. அக்கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக டெல்லி மேலிடம் முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதனை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மறுத்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தங்களை கூட்டணியில் சேர்க்க அதிக இடங்கள், துணை முதலமைச்சர் பதவி போன்ற ஆஃபர்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இருந்தாலும் கடைசியில் தவெக  தனித்து தான் போட்டியிடுவதாக அறிவித்தது. 

இந்த நிலையில் ஏ.என்.ஐ. நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிதின் நபினிடம், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் வருகை” குறித்த கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதின் நபின், முதலில் அரசியலில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் விஜய் பற்றி பேசும்போது, “என் பார்வையில் அவர் அரசியலில் முதல் முறையாக முயற்சி செய்கிறார். எனவே அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம் அரசியலில் முழுநேரமாக உழைக்க வேண்டும். இன்று ஏதோ ஒன்று கிடைத்துவிட்டு, நாளை எங்கே செல்வது என்பதை தீர்மானிக்கும் விஷயமல்ல அரசியல்.  இதில் ஒருவரின் நிலைமை எப்படி அமைகிறது என்பதை காலம்தான் சொல்லும்” என கூறினார். .

தொடர்ந்து விஜய் கூட்டத்தை ஈர்ப்பதை ஒப்புக்கொண்ட நிதின் நபின், எனினும் இந்த விஷயத்தில் முன்கூட்டியே முடிவெடுப்பது என்பது சரியானது அல்ல. அது நிலையானதா என்பதை கணிக்க நேரமும், முயற்சியும் தேவை என குறிப்பிட்டார். அதனால் இந்த நிலையில் விஜய் பற்றி எதுவும் சொல்வது சரியாக இருக்காது. மக்களைத் திரட்டி ஒன்றிணைப்பதற்கு ஈர்ப்பு ஒரு காரணிதான்.  அது காலப்போக்கிலும் தொடர்ச்சியான முயற்சியாலும் மட்டுமே வரும் என்று நிதின் நபின் தெரிவித்துள்ளார்.  

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல் பற்றி கருத்து தெரிவித்த நிதின் நபின், எங்கள் கட்சி தற்போது அதிமுகவுடனான கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவுடனான கூட்டணி  செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு நன்றாக உள்ளது. ஒருவேளை எங்களுக்கு ஏதேனும் தேவை இருந்திருந்தால்,' பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கும். ஆனால் தற்போதைக்கு  நாங்கள் எங்களின் தற்போதைய கட்டமைப்பிற்குள்ளேயே. செயல்பட்டு வருகிறோம். அப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை  என்று அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget