மேலும் அறிய

பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது; குழப்பமான அணி - பாலகிருஷ்ணன் காட்டம்...

"அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பின்மையை பாதுகாக்க திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்" - சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி

விழுப்புரம் : அம்பேத்கரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன். 

அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை மத்தியில் உள்ள ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் சீரழித்து வருகிறது. சமூகநீதி, அடிதட்டு மக்களுக்கு என உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை படிப்படியாக இல்லை என்கிற நிலை உருவாகி வருகிறது. இந்தியாவில் உயர்கல்வி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மும்மொழி திட்டத்தை இந்தியாவில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜவை எதிர்த்து தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய பன்முகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அரசியல் சாசனத்தை அடித்து நொறுக்கி, தவிடுப் பொடியாக்கும் பாஜக தலைமையிலான கூட்டணியை வீழ்த்துகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் களத்தில் உள்ளது. அம்பேத்கர் பிறந்த நாளில் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதன் மூலம் அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பின்மை தமிழ்நாட்டில் பாதுகாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் உருவாக்கப்படும். 

தேர்தல் களம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ஏனென்றால் எதிரணி ஒரு அணியாகவே இல்லை. அதில் ஏகப்பட்ட குழப்பம் மற்றும் முரண்பாடுகள் நிறைந்த அணியாக அதிமுக, பாஜக கூட்டணி உள்ளது. பாஜக அதிமுக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. பாஜக ஒவ்வொரு நாளும் தேர்தலை சீர்குலைக்க எல்லா வேலைகளையும் செய்து வருகிறார்கள். அதிகாரிகளை மாற்றுவது மட்டுமல்ல எல்லா விதமா நுணுக்கங்களையும் கையாளுகிறார்கள். ஆனால் தமிழக மக்கள் இந்த நுணுக்கங்களுக்கும், சதிகளுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். இது கடந்த கால வரலாறு. மீண்டும் ஒருமுறை அது நிரூபிக்கப்படும். 

நடிகை விஜய் மீது இளைஞர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். கடந்த பல தேர்தலிலும் புதிதாக வரும் அரசியல் சக்திக்கு ஈர்ப்பு இருப்பதை பார்த்துள்ளோம். ஏற்கனவே வலுவான கூட்டணியாக உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை உறுதி. திமுக கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது. இதன் வாக்கு வங்கி உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் பிரிந்து இருந்தவர்கள். ஒருவரையொருவர் எதிர்த்தவர்கள் தான் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். எனவே அந்த அணையின் வாக்கு பாதிக்கப்படலாம். அதுவும் பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget