![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP Cvoter Opinion Poll: உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? அதிரடியாக வெளியான கருத்துக்கணிப்பு !
ABP CVoter Opinion Poll UP Election 2022: உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைய இருப்பதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
![ABP Cvoter Opinion Poll: உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? அதிரடியாக வெளியான கருத்துக்கணிப்பு ! ABP Cvoter Survey UP Assembly Election 2022 Opinion Poll Predictions bjp yogi adityanath samajwadi party akhilesh yadav seat sharing uttar pradesh ABP Cvoter Opinion Poll: உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? அதிரடியாக வெளியான கருத்துக்கணிப்பு !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/07/e72d25a58d98e7e306cc66f5e8adcaa1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டின் அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்தார். அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் பிப்.20ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் பிப்.24ஆம் தேதியும், 5 ஆம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும்,ஆறாம் கட்ட தேர்தல் மார்ச் 3ம் தேதியும், 7ம் கட்டதேர்தல் மார்ச் 7ம் தேதியும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 350 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிட உள்ளனர்.
இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்று ஏபிபியும் - சி வோட்டரும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அந்த கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக ஆட்சியமைய இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளது. நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தலில் பாஜக 231 தொகுதிகள் வெற்றி பெறலாம் என்று கருத்து கணிப்பு வெளியானாலும், 225 முதல் 237 தொகுதிகள் வரை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
அதேபோல், 1992 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 145 தொகுதிகள் வெற்றி பெறலாம் என்று கருத்து கணிப்பு வெளியானாலும், 139 முதல் 151 தொகுதிகள் வரை வெற்றி பெற்று எதிர் கட்சியாக வலம் வரலாம்.
தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி அதிகபட்சமாக 17 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கணிக்க பட்டாலும், 13 முதல் 21 இடங்கள் வரை வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகள் வெற்றி பெறலாம் என்று கருத்து கணிப்பு வெளியானாலும், 6 முதல் 8 தொகுதிகள் வரை வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. பிற கட்சியாக வலம் வரும் சிறிய கட்சிகள் அதிகபட்சமாக 4 முதல் 6 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம்.
மண்டலம் வாரியான வெற்றி வாய்ப்பு :
அவத் மண்டலம் :
பந்தல்கண்ட் மண்டலம் :
பூர்வாஞ்சல் மண்டலம் :
வெஸ்டேர்ன் உபி மண்டலம் :
கருத்து கணிப்பு வெளியிட்டோர் : ABP cvoter
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)