மேலும் அறிய

திருச்சி மாநகராட்சி : 65 வார்டுகளுக்கு 718 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 401 வார்டுகளுக்கு மொத்தம் 2, 284 பேர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான  தேர்தல்கள் குறித்த அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டது.  இதன்படி திருச்சி மாவட் டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை,   துவாக்குடி, துறையூர்,  லால்குடி,  முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர்,  கூத்தைப்பார்,  மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 4 ஆம் தேதியுடன் முடிந்தது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  53 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சியில் 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகள் என  401 வார்டுகளில் 1, 262 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,58,674 பேர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 512632 பேர்களும் , பெண்கள் 545867 பேர்களும், மூன்றாம் பாலினம் 175 பேர்களும் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சி : 65 வார்டுகளுக்கு 718 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிக அளவில் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.  திருச்சி மாநகராட்சியில் 65 பேர் பதவிக்கு 718 பேர் போட்டியிட உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் இறுதி நாளான நேற்று  384 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 65 வார்டு உறுப்பினர் பதவிக்கு 718 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நகராட்சியில் 676 பேரும் பேரூராட்சியில் 896 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம்  2,284 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி மாநகராட்சி : 65 வார்டுகளுக்கு 718 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை, பின்பு தமிழகத்தில் முக்கிய பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சி, விஜய் மக்கள் இயக்கம் என அனைவரும் வேட்பாளர்களை இறுதி செய்தபிறகு வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும்  சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் அடுத்த அடுத்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கினர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் இரண்டு பேர்கள் மட்டும் அனுமதிக்கபடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்கபடுகிறதா என கண்காணிப்பு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் வேட்புமனு தாக்கல செய்யும் இடங்களை ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவராசு இதுவரை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எதுவும் வரவில்லை என்றார். புகார்கள் வரும்பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget