Law Admission: சட்டப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? மே 31 கடைசி!
பிஏ எல்எல்பி (B.A.LL.B.(Hons.) ), பிகாம் எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய ஹானர்ஸ் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு (மே 12) இன்று தொடங்கி உள்ளது.
பிஏ எல்எல்பி (B.A.LL.B.(Hons.) ), பிகாம் எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய ஹானர்ஸ் படிப்புகளில் சேர முடியும். மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. எனினும் 3 ஆண்டு எல்எல்பி, எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் சீர்மிகு சட்டப் பள்ளிகள், அரசு சட்டக் கல்லூரிகள், தனியார் சட்டக் கல்லூரிகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 14 சட்டக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.
மாணவர் சேர்க்கை எப்படி?
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடைபெறும். சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை.
கல்வித் தகுதி
அம்பேத்கர் சீர்மிகுச் சட்டப்பள்ளியில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்களை வாங்கி இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 60 சதவீதத்திற்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எனினும் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிகளில் சேர, பொதுப் பிரிவினர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீதம் குறையாமல் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு
ஆன்லைன் மூலம் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள், மெரிட் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
மாணவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த அறிவிக்கையை முழுமையாகக் காண: https://tndalu.ac.in/storage/cms/6820525933223.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தொலைபேசி எண்கள்: 044-24641919 / 24957414





















