60 ஆயிரம் கம்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி தவிப்பு.. பணிக்கான வழி ஏற்படுமா?
தமிழ்நாட்டில் பிஎட் கணினி அறிவியல் படித்த 60 ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் 10 ஆண்டுகளாக வேலையின்றி தவித்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆரம்பம் முதலே கணினி பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்த வசதி அரசு பள்ளிகளில் கிடைத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கணினி அறிவியல் பாடம் கற்க வேண்டும். தமிழக அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு கணினி பாடத்தை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மேலும் இந்தப் பாடத்திட்டம் கடந்த 2009- ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் இடம் பெறும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இலவச கணினி அறிவியல் கல்வி அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி திட்டம் கடந்த 2011 மற்றும் 2012- ஆம் ஆண்டு வகுப்புகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வராமல் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணினி அறிவியல் பிஎட் (BED) படித்த பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியானது இதனிடையே மத்திய அரசு 2010- ஆம் ஆண்டு ஏற்படுத்திய கல்விக் கொள்கை காரணமாக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாகி விடும் இந்த புதிய நடைமுறையை கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி என்பதை தமிழ்நாடு அரசு சட்டபூர்வமாக்கியது. இதனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதில் கணினி அறிவியல் பிஎட் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. எனவே 2013, 2017 ஆம் ஆண்டு மட்டும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுகளில் கணினி அறிவியல் பாடப்பட்டதாரிகளுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை.
தொடக்கப்பள்ளிகளில் தான் கணினி அறிவியல் பாடம் இல்லை மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் உள்ளதால் அதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருதி கணினி பட்டதாரிகள் தங்களின் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அடிப்படையில் அரசு பள்ளிகளில் வேலை கிடைக்கும் என இன்றுவரை 10 ஆண்டுகளாக நம்பி தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளுமா?
ABP NADU நிறுவனத்தில் இருந்து கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் குமரேசனிடம் பேசுகையில்;
தமிழ்நாட்டில் பிஎட் கண்னி அறிவியல் இளநிலை, முதுநிலை பட்டபடிப்பு முடித்து வேலைக்கா 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு இன்றி 10 ஆண்டுகளாக உள்ளனர். தமிழகத்தில் சமசீர் பாடம் கடந்த 2012 ஆம் ஆண்டு கலைஞர் கொண்டு வந்தார், அந்த பாடங்களை அதிமுக அரசு நிறுத்து விட்டனர். பின்னர் சமச்சீர் பாட திட்டத்தை அனைத்து பாடதிட்டத்தையும் கொண்டு வந்தனர். ஆனால் கணினி அறிவியல் பாடதிட்டத்தை கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டை பின்பற்றி அனைத்து மாநிலத்திலும் கொண்டுவந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இல்லை , அதன்பிறகு தமிழ் நாட்டில் அதிமுக அரசு உள்ளபோது புதிய பாடத்திட்டம் கொணடுவந்தனர். அப்போது 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் உள்ள அறிவியல் பாட புத்தகத்தில் 3 பக்கங்கள் கொண்ட கண்னி அறிவியல் பற்றி உள்ளது. இதனை வைத்து மாணவர்கள் எப்படி பயில்வார்கள் என்று தெரிவித்தார்.
அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆரம்ப கல்வி முதல் கணினி அறிவியல் பாடம் உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உள்ளது. நமது நாட்டில் தகவல் தொழில்நுட்ப என்பது எங்கேயோ சென்றுகொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் கணினி கல்வி அறிவியல் என்பது இல்லை, இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தோம் மற்றும் மணு அளித்துள்ளோம். ஆனால் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை முதலமைச்சரின் 1100 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் கூறினோம் ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். தற்போது பள்ளிமாணவர்களுக்கு கணினி அறிவியல் என்பது எட்டாக்கனியாக உள்ளது என்றும் திமுக அரசு கொண்டு வந்த இந்த கணினி அறிவியல் பாடத் திட்டத்தை மீண்டும் திமுக அரசு கொண்டுவர வேண்டும்” என தெரிவித்தார்.