மேலும் அறிய

Free Laptop: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் எப்போது?- அமைச்சர் அன்பில் தகவல்

மாணவர்களுக்கு லேட்டாப் எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். 

மாணவர்களுக்கு லேட்டாப் எப்போது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ,மாணவிகளுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 

கைவிடப்பட்டதா இலவச மடிக்கணினி திட்டம்?

கொரோனா தொற்று பரவலால் மடிக்கணினி கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் உலகளவில் மடிக்கணினி தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதன் விலை வெகுவாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதனிடையே, மடிக்கணினிக்கு பதிலாக டேப்லெட் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை. சர்வதேச மந்தநிலை காரணமாக கொள்முதலில் தாமதம் நிலவுகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் இதுவரை மடிக்கணினி குறித்த எந்த தகவலும் இல்லை. 

நிதி நிலைமை, லேப்டாப் தயாரிக்க மூலப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து இந்த கல்வி ஆண்டில் லேப்டாப் வழங்கப்படும். டேப் வழங்கலாமா? எது உபயோகிக்க ஏற்றதாக இருக்கும்? என்று ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் தெரிவித்திருந்தார். 

மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் 

இதற்கிடையே நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழா தஞ்சாவூரில் உள்ள நிப்டெம் என்று அழைக்கப்படும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (NIFTEM-T) பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு லேப்டாப்புகளை வழங்கினார். 

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாணவர்கள் நிப்டெம் மத்திய அரசு நிறுவனத்தில் பயில்கின்றனர். அம்மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக லேப்டாப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாதிரி பள்ளித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்.ஐ.டி., ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம்.

நிதிநிலை சரியான பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த கால ஆட்சியில் 1.25 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படாமல் விட்டுச் சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலும், 6 ஆயிரத்து 218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிதொழில்நுட்ப ஆய்வகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிநவீன மென்பொருள்கள் உள்பட முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
India Vs Pakistan: பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
Embed widget