மேலும் அறிய

PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!

கல்வி உதவித்தொகை படிவத்தை புதுப்பித்தல் (Renewal) செய்து இணைப்பில்  பூர்த்தி செய்து 31.08.2026க்குள் விண்ணப்பித்திட வேண்டும்.

விருதுநகர் மாவட்டம்  ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI- Top Class education in schools for OBC, EBC & DNT Students) செயல்படுத்தப்பட்டு  வருகிறது. அதன்படி, 2026-27 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ளது.  (Top class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் – 12 வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ,மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் புதுப்பித்தல் மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarship.gov.in)  விண்ணப்பிக்கலாம்.

இணைப்பில்  பூர்த்தி செய்து விண்ணப்பித்திட வேண்டும்.

 இத்திட்டத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு கல்விக்  கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு  அதிகபட்சமாக ரூ.75,000, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 30% மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT)  பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல்  வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்  மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.  இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2025-26 கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ,மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Scholarship Portal - (https://scholarship.gov.in) கல்வி உதவித்தொகை படிவத்தை புதுப்பித்தல் (Renewal) செய்து இணைப்பில்  பூர்த்தி செய்து 31.08.2026க்குள் விண்ணப்பித்திட வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான கடைசி நாள்

இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மாணவ,மாணவிகளின் விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள்: 15.09.2026.  மேலும், இத்திட்டத்திற்கு 2026-27-ஆம் ஆண்டிற்கு  புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ,மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.  மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship portal (https://scholarship.gov.in)  மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைதளத்தில் (https://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget