TNPSC Group-II முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி! நீங்களும் சேரலாம்!
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-II Mains (முதன்மை) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-II Mains (முதன்மை) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
TNPSC Group-II Mains (முதன்மை) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற TNPSC GROUP - II முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், இலவச பாடத்திட்ட தேர்வுகள் (TEST BATCH) மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.
பயிற்சி பெற்ற 193 மாணவர்களில் 125 நபர்கள் தேர்ச்சி
இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 193 மாணவர்களில் 125 நபர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி பெற்றனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு அதில் 12 மாணவ/மாணவிகள் பல்வேறு துறைகளில் பணிவாய்ப்பினை பெற்றனர். தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு இதுவரை 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNPSC) Group-II prelims (முதல்நிலை) தேர்வுக்கு 15.07.2025 அன்று 650 பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டு 28.09.2025 அன்று தேர்வும் நடத்தப்பட்டது.
இலவச பயிற்சி வகுப்புகள்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group - II prelims (முதல்நிலை) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் (30.07.2025 முதல் 18.09.2025 வரை) பாடவாரியான இலவச அட்டவணை தேர்வுகள் மற்றும் 3 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து TNPSC Group II Mains (முதன்மை) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற 20.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. TNPSC Group-II mains இலவச பயிற்சி வகுப்பிற்கு வரும் தேர்வர்கள் passport size photo-1 மற்றும் Group - II prelims (முதல்நிலை) தேர்விற்கான Hall ticket Xerox 1 உடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரியுமாறு தெரிவிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group - II Mains (முதன்மை) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.





















