மேலும் அறிய

IELTS தேவையில்லை... முழு உதவித்தொகையுடன் இலவசப் படிப்பு! சிங்கப்பூரில் ஓர் அரிய வாய்ப்பு!

2026-ம் ஆண்டில், ஐஇஎல்டிஎஸ் மதிப்பெண் இல்லாமலேயே சிங்கப்பூரின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். ஆனால், பலருக்கும் இருக்கும் ஒரே தயக்கம் ஆங்கிலப் புலமைத் தேர்வான ஐஇஎல்டிஎஸ் (IELTS). இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமே என்ற பயத்திலேயே பலர் தங்கள் கனவைக் கைவிடுகிறார்கள். ஆனால், இனி அந்தக் கவலை வேண்டாம்.

2026-ம் ஆண்டில், ஐஇஎல்டிஎஸ் மதிப்பெண் இல்லாமலேயே சிங்கப்பூரின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, கல்விக் கட்டணம், தங்குமிடம், மற்றும் விமானச் செலவு என அனைத்தையும் உள்ளடக்கிய முழு உதவித்தொகை (Full Funding) திட்டங்கள் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. ஆசியாவிலேயே தரமான கல்விக்கு பெயர் பெற்ற சிங்கப்பூரில், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் (NUS) மற்றும் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU) போன்றவை உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ளன. இங்கு கல்வி மட்டுமின்றி, பாதுகாப்பான சூழல் மற்றும் படிப்புக்குப் பின் பிரகாசமான வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.

ஐஇஎல்டிஎஸ் இல்லாமல் எப்படி?

உங்கள் முந்தைய கல்வியை (பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பு) ஆங்கில வழியில் படித்திருந்தாலே போதுமானது. உங்கள் கல்வி நிறுவனத்திடமிருந்து ‘மீடியம் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷன்’ (MOI Letter) சான்றிதழைப் பெற்று சமர்ப்பித்தால், ஐஇஎல்டிஎஸ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் மட்டும் தனியாக நேர்முகத் தேர்வு வைக்கலாம் அல்லது டோஃபெல் (TOEFL) போன்ற மாற்றுத் தேர்வுகளை ஏற்கலாம்.

உதவித்தொகைகள் என்னென்ன?

சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் யுனிவர்சிட்டி (SMU), SUTD மற்றும் SIT போன்றவையும் இந்தச் சலுகையை வழங்குகின்றன. உதவித் தொகையைப் பொறுத்தவரை, ‘சிங்கா’ (SINGA) ஸ்காலர்ஷிப் மிகவும் பிரபலமானது. இது முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு முழுக் கல்விக்கட்டணம், மாதாந்திர உதவித்தொகை மற்றும் விமான டிக்கெட் ஆகியவற்றை வழங்குகிறது. இதேபோல் NUS மற்றும் NTU வழங்கும் பிரத்யேக உதவித் தொகைகளும் உள்ளன.

விண்ணப்பிக்கத் தயாராகும் மாணவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் நகல், ஆங்கிலத்தில் படித்ததற்கான சான்று (MOI), மற்றும் ஏன் அங்கு படிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான விளக்கக் கடிதம் (SOP) ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அட்மிஷன் கிடைத்ததும் சிங்கப்பூர் குடியேற்றத் துறையின் (ICA) இணையதளம் வழியாக எளிதாக மாணவர் விசா பெறலாம்.

ஆங்கிலத் தேர்வு என்ற தடையை உடைத்து, உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாகப் பெற இதுவே சரியான நேரம். 2026-27 கல்வியாண்டிற்கான இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

ஆல் தி பெஸ்ட்!

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget