Varalakshmi Vratham 2025: நாளை ஆக.8 பள்ளிகளுக்கு விடுமுறை? 3 நாள் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மகிழ்ச்சி!
Varalakshmi Vratham 2025 Holiday: அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இயங்கும் சில தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. சில தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 3 நாள் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நாளை வரலட்சுமி விரதம்
நாடு முழுவதும் வரலட்சுமி விரதம் நாளை (ஆக.8) கொண்டாடப்படுகிறது. லட்சுமி தேவியை நாளை பூஜித்தால், செல்வ வளம் பெருகும், பணம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் ரக்ஷா பந்தனுக்கு முதல் நாளான நாளை (ஆகஸ்ட் 8ஆம் தேதி) வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வரலட்சுமி விரத பண்டிகைக்கு விடுமுறை இல்லை. அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் இயங்கும் சில தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக் கிழமை, 10ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என வருவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்த மாதத்தில் காலாண்டு விடுமுறை
இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் 26ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது.





















