மேலும் அறிய

Ramadoss: நிரப்பப்படாமல் இருக்கும் 10 ஆயிரம் எஸ்சி, எஸ்டி பணியிடங்கள்; இதுதான் சமூகநீதி அரசுக்கு அழகா?- ராமதாஸ் கேள்வி

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.

பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை இரண்டரை ஆண்டுகளாக நிரப்பாமல் இருப்பது தான் சமூக நீதியா என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு  செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள்  விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

ஒற்றை சிறப்பு ஆள் தேர்வின் மூலம் நிரப்பி இருக்கலாம்

தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால், 34 துறைகளிலும் காலியாக உள்ள பணிகளின் தன்மைக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட உரிய ஆள் தேர்வு அமைப்புகளின் வாயிலாக ஒற்றை சிறப்பு ஆள் தேர்வின் மூலம் அனைத்து பணியிடங்களையும் நிரப்பி இருக்க முடியும். அதற்கு அதிக அளவாக 6 மாதங்கள் கூடத் தேவைப்பட்டிருக்காது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல.

பெரும் சமூக அநீதி

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களை, இல்லாத காரணங்களைக் கூறி நிரப்பாமல் வைத்திருப்பதுதான் பெரும் சமூக அநீதி ஆகும். இதற்கும் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

அதிலும், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட 8100 பணியிடங்களையும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 2300 பணியிடங்களையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பாமல் வைத்திருப்பது அந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டை ஆகும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது, உச்சநீதிமன்ற ஆணைப்படி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற சமூகநீதி சார்ந்த விஷயங்களில் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் நடந்து கொள்ளும் தமிழக அரசு, பட்டியலினத்தவர், பழங்குடியினரின் சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகளிலும் அதே அணுகுமுறையை பின்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.  

10,400 பின்னடைவு பணியிடங்களையும் நிரப்புக

தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள் தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget