மேலும் அறிய

Fake Universities: முழிச்சுக்கோங்க.. நாடு முழுவதும் போலி பல்கலைக்கழகங்கள்; பட்டம் செல்லாது.. யுஜிசி கொடுத்த அலர்ட்

நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் அங்கு வழங்கும் பட்டங்கள் செல்லாது என்பதால் மாணவர்கள் அவற்றில் சேர வேண்டாம் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் அங்கு வழங்கும் பட்டங்கள் செல்லாது என்பதால் மாணவர்கள் அவற்றில் சேர வேண்டாம் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் போலி பல்கலைக்கழகங்களின் விவரங்களை யுஜிசி வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஜோஷி நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் அங்கு வழங்கும் பட்டங்கள் செல்லாது என்பதால் மாணவர்கள் அவற்றில் சேர வேண்டாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

’’யுஜிசி சட்ட விதி 1956-க்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாதவை. அவற்றின் மூலம் வேலைவாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர்களால் பெற முடியாது.

எனவே, மாணவர்கள் உயர் கல்விக்காக குறிப்பிட்ட கல்லூரியில் சேர்வதற்கு முன், www.ugc.ac.in என்ற இணையதளத்தை அணுகுவதன் மூலம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் குறித்த விவரங்களையும், போலி பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களையும்  தெரிந்து கொள்ளலாம். அதேபோல யுஜிசி விதிகளுக்கு மாறாக பட்டப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மாணவர்கள் அனுப்பலாம். அவ்வாறு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படு’’ம்.

இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் 2023-ல் யுஜிசி வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்:

டெல்லி

1. அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம் (All India Institute of Public & Physical Health Sciences- AIIPPHS), 
2. வணிக பல்கலைக்கழக நிறுவனம் (Commercial University Ltd. Daryaaganj)
3. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University)- டெல்லி
4. தொழிற்கல்வி பல்கலைக்கழகம் (Vocational University) டெல்லி
5. ஏடிஆர்- மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம் (Centric Juridical University)
6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம் ( Indian Institution of Science and Engineering)
7. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் (Viswakarma Open University for Self-employment) 
8. அத்யாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்)- Adhyatmik Vishwavidyalaya (Spiritual University).

9. ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர் (Raja Arabic University, Nagpur)

10. இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், 80, சௌரிங்கி சாலை, கொல்கத்தா -20 ( Indian Institute of Alternative Medicine, 80, Chowringhee Road, Kolkata -20)
11. மாற்று மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 8-ஏ டயமண்ட் ஹார்பர் ரோடு பில்டெக் இன், 2ஆவது மாடி, தாகூர்புகூர், கொல்கத்தா (Institute of Alternative Medicine and Research, 8-A Diamond Harbor Road Builtech inn, 2nd Floor, Thakurpukur, Kolkata)

12. காந்தி இந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத் (Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad)
13. தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர் (National University of Electro complex Homeopathy, Kanpur)
14.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்), அச்சால்டல், அலிகர் (Netaji Subhash chandra Bose Univirsity (open university), Achaltal,Aligarh )
15. பாரதிய சிக்ஷா பரிஷத், பாரத் பவன், பைசாபாத் சாலை, லக்னோ (Bhartiya Shiksha parishad, Bharat Bhawan, tvtatiyari Chinhat, Faizabad Road, Lucknow, Uttar Pradesh)

16. நவபாரத் சிக்‌ஷா பரிஷத், அனுபூர்ணா பவன், பிளாட் எண்.242, பானி டாங்கி சாலை, சக்தி நகர்,ரூர்கேலா (Nababharat Shiksha parishad, Anupoorna Bhawan, Plot No.242, Pani Tanki Road, Shakti Nagar,Rourkela -769 014)

17. வடக்கு ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பல்கலைக்கழக சாலை பரிபாடா, மயூர்பஞ்ச், ஒடிசா (North orissa University of Agriculture & Technology, University Road Baripada, Mayurbhanj, Odisha)

கர்நாடகா

18.படகான்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகால்க் பெல்காம் (Badaganvi Sarkar World Open University Education Society, Gokalq Belgaum)

கேரளா

19.புனித ஜான் பல்கலைக்கழகம், கிஷனாட்டம் (St. John's University, Kishanattam, Kerala)

புதுச்சேரி

20. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, எண். I E6, திலாஸ்பேட்டை, வழுதாவூர் சாலை, புதுச்சேரி - 605 009 (Sri Bodhi academy of Higher Education, No. I E6, Thilaspet, Vazhuthavoor Road)

ஆந்திரப் பிரதேசம்

21. கிறிஸ்து புதிய ஏற்பாடு பல்கலைக்கழகம் (Christ New Testament Deemed University, Andhra Pradesh)

22. இந்திய பைபிள் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் Bible Open University of India, Visakhapatnam, Andhra Pradesh

யுஜிசி அறிவிப்பை முழுமையாகக் காண: https://www.ugc.gov.in/pdfnews/6935021_Public_Notice_AMPC.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கின் அதிரடி ஆட்டம்; கட்டுப்படுத்துமா பெங்களூரு அணி?
RCB vs DC LIVE Score: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கின் அதிரடி ஆட்டம்; கட்டுப்படுத்துமா பெங்களூரு அணி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கின் அதிரடி ஆட்டம்; கட்டுப்படுத்துமா பெங்களூரு அணி?
RCB vs DC LIVE Score: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கின் அதிரடி ஆட்டம்; கட்டுப்படுத்துமா பெங்களூரு அணி?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget