மேலும் அறிய

யுஜிசி நெட் டிசம்பர் தேர்வு: முக்கிய அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது?

யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், NTA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2025ஆம் ஆண்டு யுஜிசி நெட் தேர்வு, டிசம்பர் மாத அமர்வுக்கான தேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

இதன்படி, தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET டிசம்பர் 2025 தேர்வை டிசம்பர் 31, 2025 முதல் ஜனவரி 7, 2026 வரை நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், NTA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in-ல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வு நாடு முழுவதும் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். தேர்வு நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக தேர்வு மைய நகரம் குறித்த தகவல் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவம்பர் 7, 2025 (இரவு 11:50 மணி) ஆகும். இந்த தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். தேர்வு நேரம் 180 நிமிடங்கள் மற்றும் தாள்களுக்கு இடையில் எந்த இடைவேளையும் அனுமதிக்கப்படாது.

UGC NET டிசம்பர் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in ஐப் பார்வையிடவும்.
  2. "Registration For UGC NET DEC 2025" என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் "New Registration" என்பதையும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் "Login" என்பதையும் கிளிக் செய்யவும்.
  4. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கட்டணத்தைச் செலுத்தவும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

தேர்வுக்கான கட்டணம் பொது/ முதுநிலை அல்லாத பிரிவினருக்கு- ரூ. 1,150, பொது- EWS/ OBC-NCL பிரிவினருக்கு ரூ. 600

பட்டியல் சாதி (SC) / பட்டியல் பழங்குடி (ST) / மாற்றுத்திறனாளிகள் (PwD)  பிரிவினருக்கு ரூ.325 ஆகும்.

UGC-NET டிசம்பர் தேர்வு தொடர்பான அடுத்தடுத்த தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும் என்று NTA விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எதற்காக இந்தத் தேர்வு?

யுஜிசி நெட் தேர்வு என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) ஆகியவற்றைத் தீர்மானிக்க நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான தேர்வாகும். இது முனைவர் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும், பல்வேறு அமைச்சகங்களின் உதவித்தொகைகளுக்கும் ஒரு தகுதித் தேர்வாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget