திருச்சியில் பொன்னி இலக்கிய திருவிழா - மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் பொன்னி இலக்கியத் திருவிழா வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவிப்பு.
தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை 2022ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயற்படுத்திய சிறந்த 3 மாவட்டங்களின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ரூபாய் 2.25 இலட்சம் பரிசுத்தொகை, கேடயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டது. மேலும், ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் பொன்னி இலக்கியத் திருவிழா' என்னும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பொன்னி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாணவிகளிடையே வினாடி வினா போட்டி 16.02.2024 ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு தெப்பக்குளம், பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நூல் வழங்கப்பட்டு அவர்கள் வாசித்தப் பின்னர் அந்த நூலில் இருந்து வினா தொடுக்கப்பட்டு சிறந்த முறையில் பதில் சொல்லும் மாணவர்கள் பரிசுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
மேலும், இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-. இரண்டாம் பரிசு ரூ.5000 /-, மூன்றாம் பரிசு ரூ.3000/- வீதம் வழங்கப்படும். இதேபோல், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலமாக மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே படம் பார்த்து கவிதை எழுதும் போட்டி மற்றும் படம் பார்த்து கட்டுரை எழுதும் போட்டி மாவட்ட மைய நூலகக் கட்டிட வளாகத்தில் 16.02.2024ஆம் நாளன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் கலந்துகொள்ளலாம். கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொருப் பிரிவிலும் முதல் பரிசு ரூ.15,000/-. இரண்டாம் பரிசு ரூ.10,000 /-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் பொது நூலகத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக பொதுமக்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி 16.02.2024ஆம் நாளன்று காலை 10.00 மணிக்கு திருச்சி மாவட்ட மைய நூலகக் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது. போட்டி தொடங்கும் நேரத்தில் ஒரு சிறுகதையின் இரண்டு அல்லது மூன்று வரிகளில் கதை ஆரம்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாக சிறுகதை எழுதவேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.5,000/-, மூன்றாம் பரிசு ரூ.3000/- என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும்.
இதனை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு 23.02.2024 அன்று கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பொன்னி இலக்கியத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும். சொற்பொழிவு, நடைபெறும். நிறைவுநாள் விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் பொன்னி இலக்கியத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள். தமிழ்ச் செம்மல் விருதாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மேற்கண்ட தகவலை, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.