மேலும் அறிய

TRB Exam: பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு: திமுக தேர்தல்  வாக்குறுதி என்ன ஆனது?- அன்புமணி கேள்வி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாணை எண் 149 ரத்து செய்யப்படும் என்ற தேர்தல்  வாக்குறுதி என்ன ஆனது என பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாணை எண் 149 ரத்து செய்யப்படும் என்ற தேர்தல்  வாக்குறுதி என்ன ஆனது என பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில்  அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள பயிற்றுனர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆசிரியர்  தேர்வு வாரியத்தின் இந்த நடவடிக்கை  பட்டதாரி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு இரு வகையில் ஏமாற்றம் அளித்திருக்கிறது.

முதலாவதாக, அரசு பள்ளிகளில் 3587  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கை  ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு  நடத்தப்படும் என்று கடந்த டிசம்பர் மாதமே  ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவித்திருந்தது. அதன்பின்  7 மாதங்கள் தாமதமாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  நிரப்பப்பட உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை  2,222 ஆக குறைந்து விட்டது. அறிவிக்கை வெளியிட 7 மாதங்கள் தாமதமாகியுள்ள நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, காலியிடங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வியப்பளிக்கிறது.  அனைத்து காலியிடங்களையும் நிரப்பி அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்  என்ற எண்ணமும், அக்கறையும் அரசுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஏழை மாணவர்களுக்கு பெரும் துரோகம் 

இரண்டாவதாக, 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட  அரசாணை எண் 149-இன்படி, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அரசாணை எண் 149, அதனடிப்படையிலான போட்டித் தேர்வு ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த  திமுக, இப்போது கடந்த ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித் தேர்வை நடத்த துணிந்திருப்பதன் மூலம்,  தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் துரோகம் செய்திருக்கிறது.

2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால்,  2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை அப்போதைய அரசு திணித்தது. 

அதற்கு  பா.ம.க.வுடன்  இணைந்து எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்த வலியுறுத்தி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், போட்டித் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று அரசு அறிவித்திருக்கிறது.

ஒரே பணிக்கு தகுதித் தேர்வு, போட்டிதேர்வா?

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகமும் என்னென்ன காரணங்களுக்காக எதிர்க்கிறதோ, அந்தக் காரணங்கள் அனைத்தும்  போட்டித் தேர்வுக்கு எதிராகவும் உள்ளன. ஒரு படிப்புக்கு  12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, நீட் தேர்வு என இரு தேர்வுகள்  தேவையில்லை என்பதுதான் நீட் தேர்வை எதிர்ப்பதற்காக தமிழக அரசு கூறும்  காரணமாகும். அப்படியானால், ஒரே பணிக்கு தகுதித் தேர்வு, போட்டிதேர்வு என இரு தேர்வுகளை நடத்துவது  மட்டும் எப்படி சரியாக இருகும்? எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட  வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து  தமிழக அரசு ஆணையிட வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget