மேலும் அறிய

உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!

புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்?- ஈபிஎஸ் கேள்வி

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கவும் TVK அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த விடியா திமுக ஆட்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வில் மொத்தம் 42,064 தேர்வர்கள் பங்கேற்றனர். தமிழ் மொழிக்கான தேர்வு தவிர, 150 மதிப்பெண்களுக்கான பாடம் சார்ந்த புறநிலை வினாக்கள் பகுதி மற்றும் 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரைத் தாள் தேர்வு நடைபெற்றது.

-உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 5 25.6.2026 வியாழக் கிழமையன்று அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் '0' மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பூஜ்ஜியம் மதிப்பெண்

இதற்கு நேர்மாறாக, புறநிலை வினாத்தாளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில், 50-க்கு 49 வரை அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது அவர்களின் இறுதித் தரவரிசையை மாற்றியமைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

"புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும் ? மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுகிறது" என்று தேர்வு எழுதியவர்களும், தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

"பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, வேலை பெறுவதற்காக நாங்கள் இந்தத் தேர்வை எழுதினோம். ஆனால், இந்தத் தன்னிச்சையான மதிப்பீடு எங்கள் எதிர்காலத்தை ஒரு முச்சந்தியில் நிறுத்தியுள்ளது," என்று கட்டுரைத் தாளில் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர். மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் வழங்கியதன் மூலம், TRB நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வில் விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்வர்கள் கோரிக்கை

விளக்கத் தாளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றை TRB பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான மறுமதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பலவற்றில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், பொறுப்பு முதல்வரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும்; 50 சவீதத்திற்குமேல் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு கல்லூரியின் கற்பித்தல்  திறன் குறைந்து, மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி படையெடுப்பது அதிகமாகியுள்ளது.

இதன் காரணமாக, அதிமுக ஆட்சிக் காலத்தில், 2019-20 கல்வி ஆண்டில், இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 51.4 சதவீதமாக உயர்ந்து முதலிடத்தில் இருந்தது, விடியா திமுக ஆட்சியின் குளறுபடிகளால் உயர் கல்வியில் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக சரிந்தது.

45 சதவீத இடங்கள் காலி

இந்நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த TVK அரசு, கல்லூரி மாணவர் சேர்க்கைகளுக்கு இன்றுவரை சரியான வழிமுறை வழங்காத காரணத்தினால், இந்தாண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டு 60 நாட்கள் கடந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 45 சதவீத இடங்கள் காலியாக உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வருங்கால மாணவச் செல்வங்களுக்கு பாடம் கற்பித்து வழிகாட்டியாக இருக்கக்கூடிய உதவிப் பேராசிரியர்கள் தேர்வில், இது போன்ற முறைகேடுகள் நடைபெற்றால், கற்றல், கற்பித்தல் முறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அரசு கல்லூரிகளில் சேர்ந்து அதிக அளவு பயனடையும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரின் எதிர்காலமும், நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாக மாறிவிடும்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

என்ற குறளை நினைவுபடுத்துவதுடன், தகுதியான தேர்வர்களை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டுமென்றும் TVK அரசை வலியுறுத்துகிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna Vs DMK: ஆமாம் சோபா கொடுத்தோம்.. கூட்டணி இல்லைனா உதயநிதி டெபாசிட் கூட வாங்கி இருக்க முடியாது.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
ப்ளீஸ் வேண்டாம் விட்டுடுங்க.. தாலி கட்டிய பொண்டாட்டிணு கூட பார்க்காமல்.. அண்ணனும், கணவரும் மாறி மாறி.!
Nissan 7 Seater SUV Launch: டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
டெக்டானை விட பெரிய காரை இறக்கும் நிசான்.! புதிய 7 சீட்டர் SUV-ன் லாஞ்ச் எப்போது.? விலை என்ன.?
Embed widget