TNPSC Result 2025: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி அறிவிப்பு! உடனே பாருங்க!
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வின் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேர்வாணையத்தால் 07.09.2025 முற்பகல், 11.09.2025 முதல் 18.09.2025 வரை மற்றும் 22.09.2025 முதல் 27.09.2025 மு.ப. வரை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை)- (அறிவிக்கை எண் 10 / 2025) நடத்தப்பட்ட து. கணினி வழித் தேர்வாக இந்தத் தேர்வு நடந்தது.
உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்ய அவகாசம்
இந்த விடைத்தாள்கள் அரசுப் பணியாணர் தேர்வாணைய இணையதளத்தில் 13.10.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள காலம் 13.10.2025 முதல் 11.11.2025 வரை ஆகும்.
இந்த விடைத் தாள் இணைப்பை https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/






















