மேலும் அறிய

Group 4 Result: தாமதமாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் கவலை 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி 6 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.8 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.

இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. 

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வு முடிவுகள் வெளியாகாமல் தாமதமாகி வந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் தாமதமான நிலையில் டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. 3 வாரம் முடிந்த நிலையில், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 

தேர்வர்கள் கவலை

ஜூன் முதல் வாரம் நடைபெற்ற யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் 20 நாட்களுக்குள் வெளியிடப்பட்டு, முதன்மைத் தேர்வுகளும் (mains) நடத்தப்பட்டன. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 


Group 4 Result: தாமதமாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் கவலை 

இதனால் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்தகட்டத் தேர்வுகள் உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிட்டிருந்த தேர்வர்கள் கவலையில் உள்ளனர். இதனால், டிஎன்பிஎஸ்சி விரைந்து தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் சற்று தாமதமாகி உள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும்’’ என்று தெரிவித்தனர்.  

2023 தேர்வு எப்போது?

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
Embed widget