மேலும் அறிய

TNPSC Group 1 Prelims: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எப்படி இருந்தது?- கட்ஆஃப் அதிகரிக்குமா, குறையுமா? தேர்வர்கள் கருத்து

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எப்படி இருந்தது? கட் ஆஃப் அதிகரிக்குமா, குறையுமா என்பது குறித்துத் தேர்வை எழுதிய தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 2.38 லட்சம் தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் தேர்வை எழுதி உள்ளனர். 78 ஆயிரத்து 274 பேர் தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள 16 துணை ஆட்சியர் இடங்கள், 23 துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணியிடங்கள், 14 வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள், 21 கூட்டுறவு துறை துணை பதிவாளர் பணியிடங்கள், 14 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பணியிடங்கள், ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பணியிடம் மற்றும் ஒரு மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என மொத்தம் 90 இடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

78 ஆயிரத்து 274 பேர் தேர்வை எழுதவில்லை

இந்த 90 பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வை 2.38 லட்சம் தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் தேர்வை எழுதி உள்ளனர். 78 ஆயிரத்து 274 பேர் தேர்வை எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று (ஜூலை 13) காலை 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்பட்டு இருந்தன.

தேர்வுக்காக 38 மாவட்டங்களிலும் 797 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டன. தேர்வைக் கண்காணிக்க ஒரு அறைக்கு ஒருவர் வீதம் 797 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் மட்டும் 124 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.

செல்வகுமார், முதுகலை மாணவர்

என்னைப் பொறுத்தவரை குரூப் 1 தேர்வு எளிதாகவும் இல்லாமல் கடினமாகவும் இல்லாமல், மீடியமாகக் கேட்கப்பட்டிருந்தது. வரலாறு, இந்திய அரசியலமைப்பு கேள்விகள் எளிதாகக் கேட்கப்பட்டு இருந்தன. அதில் கேள்விகள் அதிகம் ட்விஸ்ட் செய்யப்படவில்லை.

காலை உணவுத் திட்டம் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பது உள்ளிட்ட தற்போதைய கால கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. கேள்விகள் அத்தனை கடினமில்லாததால், ஒட்டுமொத்த அளவில் கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கிருத்திகா, தனியார் நிறுவன ஊழியர்

2022ஆம் ஆண்டு குரூப் 1 முதல்நிலைத் தேர்வுடன் ஒப்பிடும்போது, இந்த முறை கேள்விகள் எளிதாகவே இருந்தன. எனினும் வழக்கமான ட்விஸ்ட்டுகளும் கேள்விகளில் வைக்கப்பட்டிருந்தன. கணிதக் கேள்விகள் அதிக நேரத்தைக் கோருவதாக இருந்தன. இலக்கியப் பகுதிகளில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. தினசரி நிகழ்வுகளைப் பொறுத்தவரையில், வழக்கத்துக்கு மாறான வகையில், கேள்விகள் இருந்தன.

இவ்வாறு தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நல்ல நியூஸ்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பி.சுசீலா..
நல்ல நியூஸ்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பி.சுசீலா..
"நானும் பெஸ்ட் ஸ்பின்னர்தான்! டெஸ்ட் ஆட ரெடியா இருக்கேன்" உத்வேகத்துடன் தமிழக வீரர் சாய் கிஷோர்
Breaking News LIVE: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Breaking News LIVE: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
சமோசாவை விரும்பி சாப்பிட்ட குழந்தைகள் மரணம்.. ஆதரவற்றோர் இல்லத்தில் மர்மம்!
சமோசாவை விரும்பி சாப்பிட்ட குழந்தைகள் மரணம்.. ஆதரவற்றோர் இல்லத்தில் மர்மம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK  Krishnagiri Issue | மாணவியிடம் அத்துமீறல் சிக்கிய நாதக நிர்வாகி  போலீஸ் அதிரடிRahul Gandhi vs Mamata banerjee | ராகுல் சொன்ன வார்த்தை! பதிலடி கொடுக்கும் மம்தா! மீண்டும் மோதல்Advocate vs Police |  ”Uniform-ஐ கழட்டிட்டு வா”குடிபோதையில் ரகளை அதிரடி காட்டிய போலீஸ்Shiv das meena |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல நியூஸ்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பி.சுசீலா..
நல்ல நியூஸ்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பி.சுசீலா..
"நானும் பெஸ்ட் ஸ்பின்னர்தான்! டெஸ்ட் ஆட ரெடியா இருக்கேன்" உத்வேகத்துடன் தமிழக வீரர் சாய் கிஷோர்
Breaking News LIVE: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
Breaking News LIVE: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
சமோசாவை விரும்பி சாப்பிட்ட குழந்தைகள் மரணம்.. ஆதரவற்றோர் இல்லத்தில் மர்மம்!
சமோசாவை விரும்பி சாப்பிட்ட குழந்தைகள் மரணம்.. ஆதரவற்றோர் இல்லத்தில் மர்மம்!
வாய்ப்புக்கு அட்ஜஸ்ட்மென்ட்.. கழிவறை கூட இல்ல.. மலையாள சினிமாத்துறையை தோலுரித்த ஹேமா கமிஷன்!
வாய்ப்புக்கு அட்ஜஸ்ட்மென்ட்.. கழிவறை கூட இல்ல.. மலையாள சினிமாத்துறையை தோலுரித்த ஹேமா கமிஷன்!
Crime : போலீசிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ரவுடிகள்.. மருத்துவமனையில் அனுமதி
Crime : போலீசிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ரவுடிகள்.. மருத்துவமனையில் அனுமதி
மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன அடியாக குறைந்தது - இன்றைய நீர் நிலவரம் இதுதான்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன அடியாக குறைந்தது - இன்றைய நீர் நிலவரம் இதுதான்.
மஞ்சள் நிறத்தில் த.வெ.கா கொடி.. விஜய் போடும் மெகா பிளான்.. பனையூரில் சம்பவம்!
மஞ்சள் நிறத்தில் த.வெ.கா கொடி.. விஜய் போடும் மெகா பிளான்.. பனையூரில் சம்பவம்!
Embed widget