மேலும் அறிய

HiTech Labs: அரசுப்பள்ளிகளில் புதிய தொழில்நுட்ப புரட்சி! 9 லட்சம் மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்கள் திறப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும் படைப்பாற்றலை வளர்க்கவும் முதற்கட்டமாக ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் 15 எந்திரவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பபட்டுள்ள 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஆய்வகங்கள் திறப்பு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (20.02.2026) சென்னை, அடையாறு குமார ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பபட்டுள்ள 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எந்திரவியல் ஆய்வகங்கள்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் முதற்கட்டமாக ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் 15 எந்திரவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

பல்வகைத் திறன் பூங்கா

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத் திறன் ஆகியவற்றை விளையாட்டு வாயிலாக மேம்படுவதற்காக முதற்கட்டமாக 20 மாவட்டங்களில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 20 பல்வகைத் திறன் பூங்காக்கள் நிறுவப்பட்டு உள்ளன.

மொழிகள் திட்டம்

6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காக, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி டிஜிட்டல் மொழிக்கற்றல் திட்டமான மொழிகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் தங்களது கேட்கும், பேசும், வாசிக்கும் மற்றும் எழுதும் (LSRW) திறன்களை சுயவேகக் கற்றல் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வருகின்றனர்.

சிறுவர் அறிவியல் பூங்கா

அறிவியல் கருத்துகளை மாணவர்கள் எளிமையாக, அனுபவத்தால் விளக்கும் வகையில் கற்றுக் கொள்ளும் பொருட்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ. 80.24 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. STEM சார்ந்த 21  கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் பூங்கா பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் செயல்படுகிறது.

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களும் திறன் வகுப்பறைகளும்

அரசுப்பள்ளிகள் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் மற்றும் திட்டமிடல் போன்ற செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு ICT தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஊக்கியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களும், அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் வெற்றிகரமாக நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளன.

உதவிபெறும் பள்ளிகள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெறும் நன்மைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில், முதற்கட்டமாக 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் 654  உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் காணொலி, ஒலி மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றலை எளிமையாக்கிப் பாடப்புத்தக உள்ளடக்கத்தை விரைவாகவும், ஆர்வமாகவும் கற்றுக்கொள்ள உதவுகின்றன.

என்னென்ன திட்டங்கள்?

மேலும், 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI), எந்திரவியல் மற்றும் குறியிடல் (Coding) தொடர்பான TN SPARK போன்ற திட்டங்களை இப்பள்ளிகளில் செயல்படுத்த இது ஒரு கல்வி வளமாக அமையும்.

இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆசிரியர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறன், பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரியும் என்று கூறப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget