TN TRB SGT: 1768 பணியிடங்கள்- இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
TN TRB SGT Registration 2024: அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே கடைசித் தேதி.
![TN TRB SGT: 1768 பணியிடங்கள்- இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி? TN TRB SGT Registration 2024 Secondary Grade Teachers Check Vacancy Exam Date Know how to apply march 20 is the last date TN TRB SGT: 1768 பணியிடங்கள்- இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/72566fc4f16892ff310da7562a7117271710844460598332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1768 பணியிடங்களைக் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 20) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. எனினும் அவை முழுமையாக நிரப்பப்படாமல், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
இதன் கீழ் பள்ளிக் கல்வித்துறையில் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கு: அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர், பிசி முஸ்லிம்கள், எம்பிசி பிரிவினருக்கு - அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம்.
கல்வித் தகுதி
* ஆசிரியர்களுக்கான பி.எட். அல்லது டி.டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்புகள் மற்றும்
* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
தேர்வு முறை
* கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு
* எழுத்துத் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
* 10வது வகுப்பு/ எஸ்.எஸ்.எல்.சி.
* 12வது வகுப்பு/ மேல்நிலைப் படிப்பு/ டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு.
* ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ / தொடக்கக் கல்வியில் டிப்ளமோ / டிப்ளமோ (சிறப்புக் கல்வி)
* பட்டப்படிப்புச் சான்றிதழ் அல்லது தற்காலிகச் சான்றிதழ்
* இளநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்
* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் (TNTET) - தாள் I
* சாதித் சான்றிதழ்
* தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் (PSTM) சான்றிதழ்
* மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்
விண்ணப்பிப்பது எப்படி?
* இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிக்கையை https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)