மேலும் அறிய

TN TRB SGT Notification: 1768 பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - எப்படி?

TN TRB SGT Notification 2024: 1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (பிப்.14) தொடங்குகிறது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (பிப்.14) தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்

பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

எனினும் தற்போது போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்‌துறையில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ நேரடி நியமனம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இதற்கு பிப்ரவரி 14 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு

தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.

எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவினர், பிசி முஸ்லிம்கள், எம்பிசி ஆகிய பிரிவினருக்கு அதிகபட்சம் 58 வயது வரை இருக்கலாம்.

கல்வித் தகுதி

* ஆசிரியர்களுக்கான பி.எட். அல்லது டி.டிஎட் அல்லது அதற்கு இணையான படிப்புகள்

மற்றும் 

* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TNTET)

தேர்வு முறை

* கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

* எழுத்துத் தேர்வு

* சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
 
* 10வது வகுப்பு/ எஸ்.எஸ்.எல்.சி.
 
* 12வது வகுப்பு/ மேல்நிலைப் படிப்பு/ டிப்ளமோ அல்லது அதற்கு இணையான படிப்பு.
 
* ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ / தொடக்கக் கல்வியில் டிப்ளமோ / டிப்ளமோ (சிறப்புக் கல்வி)
 
* பட்டப்படிப்புச் சான்றிதழ் அல்லது தற்காலிகச் சான்றிதழ்
 
* இளநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம்
 
* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் (TNTET) - தாள் I
 
* தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் (PSTM) சான்றிதழ் (தேவைப்பட்டால்)
 
* ஊனமுற்றோர் சான்றிதழ் (தேவைப்பட்டால்)

விண்ணப்பிப்பது எப்படி?

* இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முன்னதாக, விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிக்கையை  https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf என்ற இணைப்பில் காணலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget