மேலும் அறிய

TN Budget 2023: ரூ.7000 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும்; வெளியான காலை சிற்றுண்டி அறிவிப்பு 

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் ரூ.7000 கோடியில் கட்டப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் புதிய பள்ளிக் கட்டிடங்கள் ரூ.7000 கோடியில் கட்டப்படும் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதேபோல காலை உணவுத் திட்டம் ரூ.500 கோடி மதிப்பில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி மதிப்பில் புத்தகத் திருவிழா தொடர்ந்து நடத்தப்படும் எனவும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

பிற அறிவிப்புகள்

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டமானது 2025 ஆம்‌ ஆண்டுக்குள்‌ ஒன்று முதல்‌ மூன்றாம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ அடிப்படை கல்வியறிவும்‌ எண்கணிதத்‌ திறனும்‌ அடைவதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின்‌ அடிப்படையில்‌, வரும்‌ நிதியாண்டில்‌ 110 கோடி ரூபாய்‌ செலவில்‌ நான்காம்‌ ஐந்தாம்‌ வகுப்புகளுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்படும்‌.

தலைநகர்‌ சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ புத்தகத்‌ திருவிழாக்களும்‌ ஐந்து இலக்கியத்‌ திருவிழாக்களும்‌ வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும்‌ ஆண்டில்‌ 10 கோடி ரூபாய்‌ நிதியுடன்‌ தொடர உரிய நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌. 

முதல்‌ சென்னை சர்வதேச புத்தகக்‌ கண்காட்சியினை 24 நாடுகளின்‌ பங்கேற்புடன்‌ 2023 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதத்தில்‌ அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும்‌ பல்வேறு நாடுகளைச்‌ சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவு பரிமாற்றம்‌ மற்றும்‌ பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்‌ 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக்‌ கண்காட்சி வரும்‌ ஆண்டிலும்‌ நடத்தப்படும்‌.

கல்வியின்‌ தரத்தை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ எண்ணும்‌ எழுத்தும்‌, மாதிரிப்‌ பள்ளிகள்‌, திறன்மிகு பள்ளிகள்‌, உயர்தர ஆய்வகங்கள்‌, பேராசிரியர்‌ அன்பழகன்‌ பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களின்‌ பயன்கள்‌ அனைத்து மாணவர்களையும்‌ சென்றடைய வேண்டியது அவசியமாகும்‌. முதலமைச்சரின்‌ தலைமையில்‌ 19-08-2021 மற்றும்‌ 12-04-2022 ஆகிய நாட்களில்‌ நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும்‌ கண்காணிப்புக்‌ குழுக்‌ கூட்டங்களில்‌ ஆதிதிராவிடர்‌ நலப்‌ பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம்‌ நடத்தவும்‌, பராமரிக்கவும்‌, கோரிக்கைகள்‌ முன்வைக்கப்பட்டன. 

கல்விப்‌ பெருவழியில்‌ நமது இலட்சியமான சமூகநீதியை அடைந்திட, பல்வேறு துறைகளின்‌ கீழ்‌ செயல்படும்‌ பள்ளிகளின்‌ கல்வித்‌ தரத்தை உயர்த்தவும்‌, அனைத்து மாணவர்களுக்கும்‌ தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும்‌ வேண்டும்‌. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும் சீர்மரபினர்‌ நலத்துறை, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின்‌கீழ் செயல்படும்‌ அனைத்து பள்ளிகளும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ கொண்டு வரப்படும்‌. இப்பள்ளிகளில்‌ தற்போது பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ அனைத்து பணிப்‌ பயன்களும்‌ பாதுகாக்கப்படும்‌. 

இவ்வாறு அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
Embed widget