மேலும் அறிய

TN 12th Result 2024: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மயிலாடுதுறை மாவட்ட நிலவரம் இதுதான்!

Tamil Nadu 12th Result 2024 Updates: மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. மாணவர்கள் www.tnresults.nic.in மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


TN 12th Result 2024: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மயிலாடுதுறை மாவட்ட நிலவரம் இதுதான்!

தொடர்ந்து மார்ச் 23 -ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13-ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. 

தேர்வு முடிவுகள்

12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 6 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


TN 12th Result 2024: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - மயிலாடுதுறை மாவட்ட நிலவரம் இதுதான்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 289 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 355 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 644 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 872 மாணவர்களும், 5 ஆயிரத்து 37 மாணவிகளும் என 8 ஆயிரத்து 909 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 90.28 சதவீதமும், மாணவிகள் 94.06 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் ‌. மாணவர்களை விட மாணவிகள் 4 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மாநில அளவில் 29வது இடம் பெற்றுள்ளது.

எப்படிப் பார்ப்பது? 

www.dge1.tn.nic.in , 

www.dge2.tn.nic.in , 

www.dge.tn.gov.in ,

www.tnresults.nic.in

ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பிற வழிகள் 

* மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 

* அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 

* மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு எப்போது?

முன்னதாகக் கடந்த ஆண்டு மே 8 -ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 94 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget