மேலும் அறிய

மே 12 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான மார்க் ஷீட்; விடைத்தாள் நகல் எப்போது? பெறுவது எப்படி?

பிளஸ் 2 மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள்‌ வழியாக மதிப்பெண்‌ பட்டியலை (Statement of Marks) 12.05.2025 அன்று காலை 11.00 மணி முதல்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 17.05.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌.

2025ஆம் ஆண்டு மார்ச்‌ மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌ & விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பித்தல்‌ தொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது:

மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌:

மார்ச்‌ - 2025 பன்னிரெண்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள்‌ வழியாக மதிப்பெண்‌ பட்டியலை (Statement of Marks) 12.05.2025 அன்று காலை 11.00 மணி முதல்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification பகுதியில் சென்று HSE -II Year March-2025 - Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

தனித்தேர்வர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ Notification பகுதியில் சென்று HSE -II Year March-2025 - Statement of Marks பக்கத்தில் தங்களின் பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பம்‌ செய்தல்‌ 

விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வழியாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்கள்‌ வழியாகவும்‌ 13.05.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்‌ 17.05.2025 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. 11ஆம் வகுப்பு Arrear தேர்வர்களும்‌ விடைத்தாள்‌ நகல்‌ கோரி மேற்கண்ட நாட்களில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

ஒவ்வொரு பாடத்திற்கும்‌ விடைத்தாளின்‌ நகல்‌ (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்‌ ரூ.275. தேர்வர்கள்‌ விடைத்தாள்களின்‌ நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு எப்படி?

விடைத்தாள்‌ நகல்‌ பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர்‌ மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்‌.

விடைத்தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டிய நாள்‌ பின்னர்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.  விடைத்தாள்‌ நகல்‌ பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
Student Scholarship : வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
School Education : பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி
பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி
சிவகங்கை மக்களே இந்த விடயம் தெரியாம வீட்டிலேயே இருந்துராதீங்க... ரூ.59 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.!
சிவகங்கை மக்களே இந்த விடயம் தெரியாம வீட்டிலேயே இருந்துராதீங்க... ரூ.59 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை!- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
இனி Express முதல் Mofussil வரை... 12,692 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லை.! சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
தலைவலியான பட்டினப்பாக்கம்..! ஜெ., ரூட் எடுத்த CM விஜய்? புதிய தலைமை செயலகத்திற்கு இந்த இடம் செட்டாகுமா?
தலைவலியான பட்டினப்பாக்கம்..! ஜெ., ரூட் எடுத்த CM விஜய்? புதிய தலைமை செயலகத்திற்கு இந்த இடம் செட்டாகுமா?
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நின்று போன கும்பாபிஷேகம்.. கார்த்தியை ஒதுக்கி வைத்த கிராமம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Bank Strike : செப்டம்பர் 26 முதல் 5 நாள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் - வெளியான அறிவிப்பு
செப்டம்பர் 26 முதல் 5 நாள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் - வெளியான அறிவிப்பு
NirmalKumar: யாரிடம் காசு வாங்கினார்கள்? ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரம் - ஸ்டாலினுக்கு அமைச்சர் கேள்வி
யாரிடம் காசு வாங்கினார்கள்? ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரம் - ஸ்டாலினுக்கு அமைச்சர் கேள்வி
Putin Record Win in Election: ரஷ்ய தேர்தலில் அதிரிபுதிரி வெற்றியை பெற்ற புதின்; 355 இடங்களை கைப்பற்றி சாதனை.!
ரஷ்ய தேர்தலில் அதிரிபுதிரி வெற்றியை பெற்ற புதின்; 355 இடங்களை கைப்பற்றி சாதனை.!
கடலை பார்த்தபடி CM அலுவலகம்.! ஜோதிடர் சொன்னதற்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகமா? விளாசிய ஸ்டாலின்
கடலை பார்த்தபடி CM அலுவலகம்.! ஜோதிடர் சொன்னதற்காக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகமா? விளாசிய ஸ்டாலின்
Chennai Power Cut: சென்னை மக்களே.! செவ்வாய்க்கிழமை (22.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னை மக்களே.! செவ்வாய்க்கிழமை (22.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Embed widget