(Source: ECI/ABP News/ABP Majha)
10th Science Question Bank: 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அசத்துவது எப்படி? மாதிரி வினாத்தாள் பாருங்களேன்..!
10th Science Question Bank: 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அசத்துவது எப்படி? மாதிரி வினாத்தாள் பாருங்களேன்..!
பயிற்சித் தேர்வு
பாடம் – அறிவியல்
காலம்: 3.00 மணி மதிப்பெண்: 75
பகுதி – 1
(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. 12 x 1 = 12
- கணத்தாக்கு என்பது
அ) உந்த மாற்று வீதம் ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்
இ) உந்த மாற்றம் ஈ) நிறை வீத மாற்றம்
- ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு __________________.
அ) இயல்பு வாயு ஆ) நல்லியல்பு வாயு
இ) உயரிய வாயு ஈ) அரிதான வாயு
- மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
அ) 50 KHz ஆ) 20 KHz
இ) 15000 KHZ ஈ) 10000 KHz
- ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ) 16 கி ஆ) 18 கி
இ) 32 கி ஈ) 17 கி
- ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயணி செறிவு என்ன?
அ) 1 X 10-3 M ஆ) 3 M
இ) 1 X 10-11 M ஈ) 11 M
- கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாகப் பயன்படுகிறது?
அ) கார்பாக்சிலிக் அமிலம் ஆ) ஈதர்
இ) எஸ்டர் ஈ) ஆல்டிஹைடு
- காஸ்பேரியன் பட்டைகள் வேரின் __________ பகுதியில் காணப்படுகிறது.
அ) புறணி ஆ) பித்
இ) பெரிசைக்கிள் ஈ) அகத்தோல்
- இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன்
அ) எத்தனாயிக் அமிலம் ஆ) அப்சிசிக் அமிலம்
இ) ஆக்சின் ஈ) இன்சுலின்
- உலக புகையிலை எதிர்ப்பு தினம்
அ) மே 31 ஆ) ஜூன் 6
இ) ஏப்ரல் 22 ஈ) அக்டோபர் 2
- டி.என்.ஏ வின் முதுகெலும்பாக _______________ உள்ளது.
அ) டி ஆக்சி ரைபோஸ் சர்க்கரை ஆ) பாஸ்பேட்
இ) நைட்ரஜன் காரங்கள் ஈ) சர்க்கரை பாஸ்பேட்
- ‘பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை’ கோட்பாட்டை முன்மொழிந்தவர்
அ) சார்லஸ் டார்வின் ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்
இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் ஈ) கிரிகர் மெண்டல்
- நீராவிப் போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது ______________.
அ) கார்பன் டை ஆக்சைடு ஆ) ஆக்சிஜன்
இ) நீர் ஈ) கார்பன் மோனோக்சைடு
பகுதி – II
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22 - க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 7×2 = 14
- நியூட்டனின் இரண்டாம் விதியினைக் கூறு
- ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
- ஓம் விதி வரையறு.
- மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
- பொருத்துக
1. முலாம் பூசுதல் |
காற்றில்லா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு |
2. காற்றில்லா வறுத்தல் |
துத்தநாகம் பூச்சு |
3. ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை |
சில்வர் டின் ரசக்கலவை |
4. பற்குழி அடைத்தல் |
அலுமினோ வெப்ப ஒடுக்க வினை |
- ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
- மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?
- அல்லோசோம்கள் என்றால் என்ன?
- கீழ்க்கண்டவற்றை சரியா, தவறா எனக்கூறுக. தவறுகள் ஏதுமிருப்பின் திருத்தி எழுதுக. i) எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்). ii) இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை – 2 உருவாகிறது.
- 22. 5Ω மின்தடை கொண்ட மின்சூடேற்றி ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது, இந்த சூடேற்றி வழியாகப் பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க.
பகுதி – III
எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32 - க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 7 X 4= 28
- இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
- இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
- சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதியைக் கூறுக.
- கீழ்க்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.
- 1. திரவத்தில் வாயு திரவத்தில் திண்மம் 3. திண்மத்தில் திண்மம் 4. வாயுவில் வாயு
- 27. டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுபடுத்துகின்றன? இம்மாசுபாட்டினை தவிர்க்கும் வழிமுறை யாது?
- அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக
- பீனோடைப், ஜீனோடைப் பற்றி நீவிர் அறிவது என்ன?
- DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
- 31. HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை?
- 32. 0 × 10-5மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க
பகுதி – IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.. 3 X 7 =21
33.அ. உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க. (அல்லது)
ஆ. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக .
- அ. இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக (அல்லது)
ஆ i)அணுக்கட்டு எண் – வரையறு..
- ii) நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
35 அ. நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப் போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக. (அல்லது)
ஆ. காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
மாதிரி வினாத்தாள் உருவாக்கம்
- ஆசிரியர் ரா.கலைசெல்வி (A3 குழு),
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல்.
தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பிற பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.