மேலும் அறிய

10th Practical Exam: 10ம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசத்தை வரும் 31-ந் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் நலன் கருதி 31-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்

 ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கும் தேர்வுகள்  ஏப்ரல் 20-ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நேற்று முதல் (மார்ச் 27) ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்த்தது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu

  • ஏப்ரல்  6ஆம் தேதி - தமிழ் (மொழித்தாள்)
  • ஏப்ரல் 10ஆம் தேதி - ஆங்கிலம் 
  • ஏப்ரல் 13ஆம் தேதி-  கணிதம்
  • ஏப்ரல் 15ஆம் தேதி- விருப்ப மொழித்தாள்
  • ஏப்ரல் 17ஆம் தேதி- அறிவியல்
  • ஏப்ரல் 20ஆம் தேதி- சமூக அறிவியல் 

தேர்வு முடிவுகள் எப்போது?

12- ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாக உள்ளது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவு மே-19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு: 

’’நடைபெற உள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் தொர்பாக கீழ்க்காணும் நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். இந்த அறிவுரையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. இருக்கை வசதி:

அனைத்து வகை மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கும் தரைத் தளத்தில் மட்டுமே இருக்கை வசதி ஒதுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

2.கூடுதல் நேரச் சலுகை: 

கூடுதல் நேரச் சலுகை கோரிய மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் அனைவருக்கும், வழக்கமான தேர்வு நேரத்துடன் கூடுதலாக 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) தேர்வெழுத தவறாமல் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

3. டிஸ்லெக்சியா தேர்வர் விடைத்தாள்: 

டிஸ்லெக்ஸியா பாதிப்புற்ற தேர்வர்களுக்கு, சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமிக்கப்படாமல் தேர்வரே தேர்வெழுதும் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் "டிஸ்லெக்ஸியா தேர்வர்/Dyslexia Students" எழுதப்படல் வேண்டும்.

4. செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் விடைத் தாள்:

செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளித் தேர்வர்களது முதன்மை விடைத்தாளில் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையினால் செவித்திறன் குறைபாடுடைய தேர்வர் / HI Students என்று எழுதப்படல் வேண்டும்.

5. மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விடைத்தாட்களை சிப்பமாக்குதல்:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது கூடுதல் நேரச் சலுகை பெற்று, தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறையில் கண்காணிப்பாளர்கள், தேர்வு நேரம் முடிவடைந்தவுடன் பிற தேர்வர்களின் விடைத் தாள்களை சிப்பமாக்காமல் கூடுதல் நேரச் சலுகைப் பெற்று தேர்வெழுதும் தேர்வர்களின் தேர்வு நேரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். 

மேலும், தேர்வு நேரம் (பிற்பகல் 01.15 மணி) முடிவடைந்தவுடன் நிலையான படை உறுப்பினர்களும் கூடுதல் நேரம் தேர்வெழுதும் தேர்வர்கள் உள்ள அறைக்குச் சென்று கூடுதலாக கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், மேற்குறிப்பிட்ட தேர்வரின் விடைத் தாள்களை மற்ற தேர்வர்களது விடைத்தாட்களுடன் சேர்த்து ஒரே சிப்பமாக்கி முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாள் மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள்களைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget