TN 10th 11th Supplementary Exam: தொடங்கிய பதிவு; 10, பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வு அட்டவணை என்ன?
TN 10th 11th Supplementary Exam 2025: தேர்வில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களின் நலன் கருதி 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் 04.07.2025 முதல் நடைபெற உள்ளன.

10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு மாணவர்களும் தனித் தேர்வர்களும் இன்று (மே 22) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது.
10ஆம் வகுப்புப் பொது தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் மே 16 அன்று வெளியாகின. இதில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,35,119 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 4,36,120 ஆகும். இதில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே துணைத் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணாக்கர்களின் எதிர்கால நலன் கருதி இந்த துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் 04.07.2025 முதல் நடைபெற உள்ளன.
தேர்வு அட்டவணை
ஜூலை 4ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது. ஜூலை 7ஆம் தேதி ஆங்கிலம், 8ஆம் தேதி கணக்குப் பாடங்களுக்கும் ஜூலை 9ஆம் தேதி அறிவியல் பாடங்களுக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூலை 10ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்குத் தேர்வு நடைபெற உள்ளது.
11ஆம் வகுப்பு அட்டவணை

விண்ணப்பிப்பது எப்படி?
துணைத் தேர்விற்கு பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை தேர்வு துறை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
எப்போது?
பள்ளி மாணவர்களும் தனித் தேர்வர்களும் இன்று (22.05.2025) முதல் 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/






















