மேலும் அறிய

மே 19 முதல் 10, 11ஆம் வகுப்பு மார்க் ஷீட்; 20 முதல் விடைத்தாள் நகல்- பெறுவது எப்படி?

துணைத் தேர்விற்கு பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வாயிலாகவும்‌, தனித் தேர்வர்கள்‌ அரசுத் தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களிலும்‌ 22.05.2025 முதல்‌ 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்‌.

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மே 20 முதல் விடைத்தாள் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியான நிலையில், இதில் 93.80% தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது. இவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல் ஆகியவை வெளியிடப்படும் தேதி குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதேபோல துணைத் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து டிஜிஇ எனப்படும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:

மார்ச்‌ / ஏப்ரல்‌ – 2025-ல் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதம்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ வழங்குதல்‌/விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்தல்‌ / ஜூலை 2025 துணைத்தேர்வுகள்‌ நடத்துதல்‌ குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ‌

பத்தாம்‌ வகுப்பு மாணாக்கர்களுக்கு மேல்நிலைக் கல்விக்கு விண்ணப்பிக்கத்‌ தேவையான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ (Provisional Certificate) மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு (+1) மாணாக்கர்களுக்கு மதிப்பெண்‌ பட்டியல் (Statement of Marks) ஆகியவற்றை 19.05.2025 முதல்‌ www.dge.tn.gov.in இணையதளத்தில்‌பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மே 20 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ கோரி (copy of Answer sheets) 20.05.2025 முதல்‌ 24.05.2025 வரை தாங்கள்‌ பயின்ற பள்ளியின்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்‌.

* தேர்வில்‌ தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணாக்கர்களின்‌ எதிர்கால நலன் கருதி பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வினை 04.07.2025 முதல்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கால அட்டவணை 16.05.2025 அன்று வெளியிடப்படும்‌.

துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* துணைத் தேர்விற்கு பள்ளி மாணாக்கர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வாயிலாகவும்‌ தனித் தேர்வர்கள்‌ அரசுத் தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களிலும்‌ 22.05.2025 முதல்‌ 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
இனி காலை 6.30-க்கே பள்ளிகள் திறப்பு; எத்தனை நாட்களுக்கு?என்ன காரணம்?
இனி காலை 6.30-க்கே பள்ளிகள் திறப்பு; எத்தனை நாட்களுக்கு?என்ன காரணம்?
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
Upcoming Cars in July: SUV வாங்க காத்திருக்கும் மக்களே.! டெக்டான் முதல் ஹிலக்ஸ் வரை; ஜூலையில் வெளியாகும் பிரபலமான கார்கள்
SUV வாங்க காத்திருக்கும் மக்களே.! டெக்டான் முதல் ஹிலக்ஸ் வரை; ஜூலையில் வெளியாகும் பிரபலமான கார்கள்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
Embed widget