மேலும் அறிய

Titojak Protest: போராட்டம் அறிவித்த 11 ஆசிரியர் சங்கங்கள்; பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை

அக்டோபர் 13ஆம் தேதி 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 ஆம் தேதி 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. 

11 சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு

டிட்டோஜாக் என்று அழைக்கப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தது. இந்த மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடத்த டிட்டோஜாக் திட்டமிட்டது. இதை அறிந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 11 சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்தக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் (டிட்டோஜாக்) இடம்பெற்றுள்ள சங்கங்கள் சார்பாக ஒவ்வொரு சங்கத்தில் இருந்து 2 பிரதிநிதிகளுக்கு மிகாமல், நாளை (அக்.11) காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தொடர் ஆசிரியர் போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டன. 

இதற்கிடையே ஆசிரியர்கள் - கல்வித்துறை அதிகாரிகளின் பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சரும் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துப் பேசியிருந்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ’’சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்  ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர். 

அதேபோல பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.  171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவர்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து ஆசிரியர் சங்கங்களும் படிப்படியாகப் போராட்டங்களைத் திரும்பப் பெற்றன. 

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இந்நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நிர்வாகிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
ஏழை மாணவர் கல்வி: நவோதயா பள்ளிகளை தவெக அரசு திறக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget