அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிப்பது எப்படி?
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2024-2025-ஆம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை செய்ய www.skilltraining.tn.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பபதிவு துவங்கும் நாள்.10.05.2024 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்.07.06.2024 விண்ணப்பகட்டணம் - ரூ 50 (Only Online Payment) வயதுவரம்பு: 14 வயதுமுதல் அரசு நிர்ணயித்தவாறு.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (9 standard mark sheet in case of 2021 10th passed out candidates) மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, முன்னுரிமை சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பம் (Scanned image in JPG format), இமெயில் ஐடி மற்றும் கைபேசி எண் Debit card / Credit Card / UPI (Gpay)/ Net Banking ஏதேனும் ஒன்று (For Online Payment) விண்ணப்பிப்போர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவண்ணாமலை அரசு தொழிற் பயிற்சி நிலையம், செய்யார் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஜமுனாமரத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து தொழிற் பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகள் குறித்த விவரங்களை அறிந்து கொண்டு சேர்க்கை தொடர்பான விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.