மேலும் அறிய

NEET Ban: இவர்களுக்கெல்லாம் நீட் தேர்வு எழுத தடை; மருத்துவ கலந்தாய்வுக் குழு அதிரடி அறிவிப்பு

சிறப்புக் கலந்தாய்வு மூலம் கல்லூரி இடத்தை உறுதி செய்த மாணவர், சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேராவிட்டால், நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்பட உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வில் சிறப்புக் கலந்தாய்வு (Stray round) மூலம் கல்லூரி இடத்தை உறுதி செய்த மாணவர், சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேராவிட்டால், நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக கட்டிய பணம் திரும்ப அளிக்கப்படாது என்று கூறப்பட்டிருந்த சூழலில், தற்போது கூடுதலாக ஓராண்டு தடையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. 

மத்திய அரசின் கலந்தாய்வு

அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் மூலம் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஜூலை 20ஆம் தேதி) தொடங்கி உள்ள நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக் குழு இவ்வாறு அறிவித்துள்ளது. 

அதாவது மருத்துவக் கலந்தாய்வில் சிறப்புக் கலந்தாய்வு (Stray round) மூலம் கல்லூரி இடத்தை உறுதி செய்த மாணவர், சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேராவிட்டால், நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது. முன்னதாக கட்டிய பணம் திரும்ப அளிக்கப்படாது என்று கூறப்பட்டிருந்த சூழலில், தற்போது கூடுதலாக ஓராண்டு தடையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இளநிலை நீட் தேர்வு கலந்தாய்வு குறித்த முழு கையேட்டை, தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் குழு வெளியிட்டது. அதில் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபற்றி முழுமையாகக் காண: https://cdnbbsr.s3waas.gov.in/s3e0f7a4d0ef9b84b83b693bbf3feb8e6e/uploads/2023/07/2023071958.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 

தொடங்கிய கலந்தாய்வு

அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ், அரசு நிகர்நிலை, மத்தியப் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் நிறுவனங்களில் சேர இன்று (ஜூலை 20ஆம் தேதி) முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பித்து, கட்டணத்தைச் செலுத்தலாம். 

ஜூலை 22 முதல் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் இடங்களைத் தேர்வு செய்யலாம். சாய்ஸ் ஃபில்லிங் மற்றும் இடங்களை இறுதி செய்ய ஜூலை 26ஆம் தேதி இறுதித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதேபோல ஜூலை 29ஆம் தேதி கலந்தாய்வு முடிவுகள் அறிவிக்கப்படும். 

தேசிய மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தில் ஜூலை 30ஆம் தேதிக்குள் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜூலை 31 முதல் ஆக்ஸ்ட் 4ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்லூரிகள், ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget