Students Mental Health: கல்லூரி மாணவர்களுக்கு 24 மணிநேரமும் இலவச மனநல ஆலோசனை- தொலைபேசி எண் வெளியீடு!
Students Mental Health : உளவியல் சிக்கல்களால் அவதிப்படும் மக்களுக்கு (குறிப்பாக மாணவர்களுக்கு) உதவவும் ஆதரவு அளிக்கவும் டெலி மானஸ் என்னும் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை எண்ணை யுஜிசி அறிவித்துள்ளது.
Students Mental Health : உளவியல் சிக்கல்களால் அவதிப்படும் மக்களுக்கு (குறிப்பாக மாணவர்களுக்கு) உதவவும் ஆதரவு அளிக்கவும் டெலி மானஸ் என்னும் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை எண்ணை யுஜிசி அறிவித்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்பப் படிப்புகள் அல்லாத கலை, அறிவியல் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது.
பல்வேறு மொழிகளில் ஆலோசனை
இந்த நிலையில், உலகம் முழுவதுமே மனிதர்கள் மத்தியில் உளவியல் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இடையில், மக்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், டெலி மானஸ் (Tele MANAS) என்ற பெயரில் இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஜோஷி, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதில் கூறி உள்ளதாவது:
மக்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், டெலி மானஸ் (Tele MANAS) என்ற பெயரில் இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பயிற்சி பெற்ற, அங்கீகாரம் கொண்ட நிபுணர்கள், பல்வேறு மொழிகளில் ஆலோசனை அளிப்பர்.
இதற்கென ‘14416’ மற்றும் 1800- 891- 4416 என்ற இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்பதற்காக சேரும் இளம் மாணவர்கள், பல்வேறு சூழல்களைச் சந்திக்க நேரிடுகிறது. அழுத்தம், பதற்றம் மற்றும் மன நலம் சார்ந்த பிற சிக்கல்கள் உருவாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மத்திய உயர் கல்வித்துறை, பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவர்களின் மன நலனைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் உரிய நேரத்தில் உதவியை எங்கே பெறுவது என்பது தெரியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் டெலி மானஸ் தொலைபேசி வழிகாட்டி, மிகச் சிறந்த மற்றும் இலவசமான வளம் ஆகும்.
மாணவர்களிடம் பரவலாக எடுத்துச்செல்ல வேண்டும்
உளவியல் ஆலோசனை குறித்த தகவல்களை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் பரவலாக எடுத்துச்செல்ல வேண்டும். குறிப்பாக தங்களின் இணையதளம், சமூக வலைதள பக்கங்கள் மற்றும் மாணவர்கள் நியூஸ் லெட்டர் ஆகியவற்றின் மூலம் ஹைல்ப்லைன் குறித்த தகவலைப் பரப்ப வேண்டும்.
இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.
முன்னதாக 2023-ம் ஆண்டு உலக மனநல தினத்தையொட்டி நடத்தப்பட்ட தேசிய சுகாதார மனநல மாநாட்டில் ‘டெலி மானஸ்’ திட்டத்துக்கு புதிய இலச்சினை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.