மேலும் அறிய

TTSE Exam Date: வெளியான தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு அறிவிப்பு; எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு  அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1,500 வழங்கப்படும்.

2023- 2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு  அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்‌ தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து முதன்முதலாக‌ 2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்  அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்பட்டது.  2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில்,  1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

வெளியாகாத அறிவிப்பு

இந்த நிலையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான  அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனினும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு என்ற தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ் இல்லாத பிற பாடங்களுக்கான திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால், தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படாமல் கைவிடப்படுகிறதா? என்று கல்வியாளர்களும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து  2023- 2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட  அடிப்படையில் கொள்குறி வகைத் கேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்கனில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

2023- 2024-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் சிபிஎஸ்இ, ICSE உட்பட பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 20 என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இலவச லேப்டாப், சைக்கிள், மாசம் ₹1750 உதவித்தொகை.. ஐடிஐ-யில் அதிரடி அறிவிப்பு!
இனி காசு கொடுத்து படிக்க வேண்டாம்! இலவச லேப்டாப், சைக்கிள், மாசம் ₹1750 உதவித்தொகை.. ஐடிஐ-யில் அதிரடி அறிவிப்பு!
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget