மேலும் அறிய

ஜனநாயக விரோதம், தனியார்மயம்- மாநில கல்விக் கொள்கையை உடனே திரும்பப்பெற கோரிக்கை!

Tamil Nadu State Education Policy: கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியர் பணி இடங்களை நிரப்பாமல் பல பள்ளிகள் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தத்தளித்து வருவதைப் பற்றி இந்த கல்விக் கொள்கை வாயே திறக்கவில்லை.

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி மாநிலச் செயலாளர் யோகராஜன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசாங்கம் 2022-ல் நீதிபதி முருகேசன் தலைமையில் அமைத்த உயர்நிலைக்  குழு, 2024-ல் அரசாங்கத்திடம் தான் தயாரித்த கல்விக் கொள்கையை அளித்தது. மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு கல்விக் கொள்கையை  பொது வெளியில் வைத்து அனைவரின் கருத்துக்களைக் கேட்காமலும் சட்டமன்றத்தில் கூட வைத்து எந்த விவாதமும் நடத்தாமலும் தன்னிச்சையாக மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் ஜனநாயக விரோதச் செயலாகும்.

தமிழ்நாடு அரசாங்கத்தால் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் பல்வேறு திட்டங்களான எண்ணும் எழுத்தும் திட்டம், மணற்கேணி, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், திறன் மேம்பாடு, அனுபவக் கற்றல், ஒப்பார் கற்றல், எண்மக் கற்றல் (இணைய வழிக் கல்வி), மாதிரி பள்ளிகள் போன்ற பல திட்டங்களை  தொகுத்து வழங்கி  இருக்கும் இந்த அறிக்கை ஒரு கல்விக்கொள்கையின் எந்த அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கவில்லை.

ஜனநாயக விரோத அணுகுமுறை

மேற்கண்ட திட்டங்கள் யாவும் கல்வி விரோத, மாணவர் விரோதத் திட்டங்கள் என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் விமர்சித்து வந்த வேளையில் அதையே கல்விக் கொள்கையில் அறிவித்திருப்பது இந்தக் கொள்கையின் ஜனநாயக விரோத அணுகுமுறையை காட்டுகிறது.

ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்பாமல் பல பள்ளிகள் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தத்தளித்து வருவதைப் பற்றி இந்த கல்விக் கொள்கை வாயே திறக்காததோடு, ஆசிரியர் மாணவர் விகிதத்தைப் பற்றிக் கூட எதுவும் கூறாமல் இருப்பது, ஒரு கல்விக் கொள்கையின் எந்த அடிப்படை சாராம்சத்தையும் அது கொண்டிருக்கவில்லை என்பதையே மீண்டும் உணர்த்துகிறது.

கட்டாயத் தேர்ச்சி அவசியமா?

பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழலில் மாணவர்களின் எழுதும் வாசிக்கும் திறனும் கணிதத் திறனும் தோல்வி அடைந்து விட்டதாக பல அகில இந்திய ஆய்வுகள் அறிவித்த பின்னரும் கூட வகுப்பு 1 முதல் வகுப்பு 8 வரை கட்டாயத் தேர்ச்சித் திட்டத்தை தொடரப் போவதாக  இக்கல்விக் கொள்கை மூலம் அறிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது.

இதுமட்டுமின்றி கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் முக்கிய அம்சமான பள்ளி மேலாண்மைக் குழுத் திட்டம், நம்ம ஊரு நம்ம ஸ்கூல் திட்டம், பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் திட்டம், முன்னாள் மாணவர்கள் பங்களிப்புத் திட்டம், கல்வியில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு போன்ற திட்டங்களின் மூலம் மாநில அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பையும் பொறுப்பையும்  படிப்படியாக குறைக்கும் ஒரு திட்ட வரைபடமாகவே (Blue Print) தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

தனியார்மயம், வியாபாரமயம்

கல்விக்காக தமிழ்நாடு அரசாங்கம் 13.7% நிதி ஒதுக்குவதாகப் பெருமை அடித்துக் கொண்டாலும் அது ஒதுக்கி வரும் நிதி போதுமானதாக இல்லை என்பதே உண்மை. அதை ஒப்புக் கொள்ளாமல் பள்ளிகளின் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆதாரங்களுக்காகவும் மேற்கண்ட வகையில் பொது வெளியில் நிதி திரட்ட ஒரு கல்விக் கொள்கையே முன்மொழிந்து  இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இது அரசுப் பள்ளிக் கட்டமைப்பை சிதைத்து கல்வியில் தனியார்மயத்தையும் வியாபாரமயத்தையும் ஊக்குவிக்கும் போக்கேயாகும் என்பதில் ஐயமில்லை.

எனவே தமிழ்நாடு அரசாங்கம் நீண்ட கால தாமதத்திற்குப் பின் தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர கதியில் வெளியிட்டிற்கும் இந்தக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற்று அதனை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களின் கருத்துக்களைப் பெற்று உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அடித்தட்டு தமிழ்நாட்டு மக்களின், ஆசிரியர்களின், மாணவர்களின்  விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு நியாயமான, ஜனநாயகப்பூர்வ, அறிவியல்பூர்வக் கல்விக்  கொள்கையாக மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசாங்கத்தை அகில இந்திய கல்விப் பாதுக்காப்புக் கமிட்டி வலியுறுத்துகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
TET தேர்வு எழுத போறீங்களா? இந்த 4 பொருட்கள் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க பாத்துக்குங்க..!
ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
ஆசிரியர் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு: மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் 38 ஆசிரியர் பணியிடங்கள் - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி பி.எஸ்சி. நர்சிங் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - உடனே செக் பண்ணுங்க!
புதுச்சேரி பி.எஸ்சி. நர்சிங் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - உடனே செக் பண்ணுங்க!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
TVK Vs DMK: சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
NEET, JEE மாணவர் சேர்க்கை ”பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம்” அரசு பரிசீலனை
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் TVS Orbiter V2 - எவ்ளோ?
Embed widget