TN 10th, 12th Exam: ”10,12-ம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் ” - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,34,175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 15 முதல் 18 வயதுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,34,175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கொரோனாவால் மாணவர்களின் கல்வி, குறிப்பாக தேர்வு எழுதும் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ”இல்லம் தேடி கல்வி இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்பட்டது. 4 லட்சத்து 93 ஆயிரம் தன்னார்வலர்கள் இதற்காக பதிவு செய்துள்ளார்கள். 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், தற்போது மொத்தமாக 80 ஆயிரம் மையங்கள் கைவசம் உள்ளது என்றும், இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நமக்கு இன்னும் 1 லட்சத்து 70 ஆயிரம் கல்வி மையங்கள் தேவை” என்றார்
மேலும் ”இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் எனவும், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை இத்திட்டம் தடுக்கும் எனவும், தற்போது 15 முதல் 18 வயது உள்ளோருக்கு தடுப்பூசி என்பது மிகவும் முக்கியம். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்