TN 11th Result Centums: நூற்றுக்கு நூறு... எத்தனை பேர் எந்தெந்த பாடங்களில்? பிளஸ் 1 தேர்வில் தாய் மொழிக்கு என்னாச்சு?
11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 9 பேர் தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 9 பேர் தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலப் பாடம், மார்ச் 20ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
மார்ச் 24ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கும் மார்ச் 28ஆம் தேதி அன்று வேதியியல், கணக்குப் பதிவியல், மார்ச் 30ஆம் தேதி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. கடைசியாக ஏப்ரல் 05ஆம் தேதி அன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது
3,61,454 மாணவர்களும், 4,15,389 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,76,844 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,06,413 மாணவ- மாணவிகள், அதாவது 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், 9 பேர் தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 13 பேரும் இயற்பியல் பாடத்தில் 440 பேரும் சதம் அடித்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 107 பேரும் உயிரியல் பாடத்தில் 65 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
கணிதப் பாடத்தில் 17 பேரும் தாவரவியலில் 2 பேரும் நூற்றுக்கு நூறு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் 34 பேரும் கணினி அறிவியலில் 940 பேரும் வணிகவியலில் 214 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்குப் பதிவியலில் 995 பேரும் பொருளியல் பாடத்தில் 40 பேரும் கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 598 பேரும் வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 132 பேரும் நூற்றுக்கு நூறு பேர் சதம் அடித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள்
11ஆம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் 96.18 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் 2வது இடத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம் 95.73% தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அதேபோல நாமக்கல் மாவட்டம் 95.60% தேர்ச்சி விகிதத்துடன் நான்காவது இடத்திலும் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் 95.43% தேச்சி விகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. விருதுநகர் மாவட்டம் 95.19% தேர்ச்சியும், திருநெல்வேலி மாவட்டம் 95.08% தேர்ச்சியும் , அரியலூர் மாவட்டம் 94.93% தேர்ச்சியும், சிவகங்கை மாவட்டம் 94.85% தேர்ச்சியும் மற்றும் தென்காசி மாவட்டம் 94.14% தேர்ச்சியும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்:
- அறிவியல் பாடப் பிரிவுகள் - 93.38%
- வணிகவியல் பாடப் பிரிவுகள் - 88.08%
- கலைப் பிரிவுகள் - 73.59%
- தொழிற்பாடப் பிரிவுகள் - 81.60%
முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்:
- இயற்பியல் - 95.37%
- வேதியியல் - 96.74%
- உயிரியல் - 96.62%
- கணிதம் - 96.01
- தாவரவியல் - 95.30%
- விலங்கியல் - 95.27%
- கணினி அறிவியல் - 99.25%
- வணிகவியல் - 94.33%
- கணக்குப் பதிவியல் - 94.97%