எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்; மே 28 கடைசி- என்ன தகுதி? எப்படி?
எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் Bachelor of Visual Arts படிப்புகளில் 2025- 2026ஆம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மே 28 கடைசித் தேதி ஆகும்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.
இந்தக் கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (Bachelor of Visual Arts) வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் 2025- 2026ஆம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு இந்தப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மே 28 கடைசி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்ப கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் மே 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை எப்படி?
https://filminstitute.tn.gov.in/en/admission என்ற இணைப்பில் மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
குறைவான இடங்களே உள்ளதால் சேர்க்கைக்கு முந்த வேண்டியது முக்கியம். பொதுவாக ஒவ்வொரு படிப்புக்கும் தலா 14 இடங்கள் ஒதுக்கப்படும்.
https://bankpg.com/tnmgrftins/Home/Login என்ற இணைப்பின் மூலம் லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
முன்பதிவு செய்ய https://bankpg.com/tnmgrftins/Home/MGR_Admission_Register என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், பெயர், ஆதார் எண், இ மெயில், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தேர்வர்கள் https://bankpg.com/tnmgrftins/assets/MGR_FILM_INSTITUTE_USER_MANUAL_ADMISSION_2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விளக்கம் பெறலாம்..
கூடுதல் விவரங்களை https://www.filminstitute.tn.gov.in/en என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தொலைபேசி எண்கள்: 04422542212, 89409 96552
இ மெயில் முகவரி: support@isky.in






















