மேலும் அறிய

TN Arts College Admission: இன்றே கடைசி; அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துவிட்டீர்களா?- வழிமுறைகள் இதோ!

மாணவர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க இன்று (மே 22) கடைசித் தேதி ஆகும். 

மாணவர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க இன்று (மே 22) கடைசித் தேதி ஆகும். 

தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 8-ம் தேதி தொடங்கியது. 

மும்முரமாக நடைபெற்று வரும் இந்த மாணவர் சேர்க்கை இடங்களுக்கு, இதுவரை 2 லட்சத்து 90,973 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2 லட்சத்து 36,677 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் ரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க இன்று (மே 22) கடைசித் தேதி ஆகும். 

முன்னதாக விண்ணப்பிக்க மே 19 கடைசித் தேதியாக இருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 

முற்றிலும் இணைய முறையில் விண்ணப்பப் பதிவு

விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல், விருப்பமான கல்லூாிகள் மற்றும் பாடப்பிரிவைப் பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல்,விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும்  சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்தும் இணைய வழியாகவே நடத்தப்படும். 

முன்னதாக எல்லாக் கல்லூரிகளிலும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ரூ.200 விண்ணப்பக் கட்டணத்தை மட்டுமே கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். 

வகுப்புகள் எப்போது?

கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

TN Arts College Admission: இன்றே கடைசி; அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துவிட்டீர்களா?- வழிமுறைகள் இதோ!

எந்தெந்த இணைப்புகளில் என்னென்ன விவரங்கள்?

கல்லூரி கல்வி இயக்குநரகம் சார்பில், ஆன்லைனில் விண்ணப்பிக்க முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மாணவர்கள்,

விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் குறித்து முழுமையாக அறிய https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

வீடியோ வடிவில் விண்ணப்பப் பதிவு குறித்து தெரிந்துகொள்ள: https://www.youtube.com/watch?v=RYFz1CMx434&feature=youtu.be என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழு பட்டியலைக் காண: https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1684479144557 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று அறிந்துகொள்ள https://static.tneaonline.org/docs/arts/DATA_SHEET-2023.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: tngasa2023@gmail.com
தொலைபேசி எண்கள்: 044- 28271911, 044-28260098

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
Lowest Score T20: டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thadi Balaji meets Chinnadurai : சாதித்து காட்டிய சின்னதுரை.. ஓடி வந்த தாடி பாலாஜிCow Baby Shower : ’’எங்க வீட்டு மகாலட்சுமி’’பசுவுக்கு வளைகாப்பு!அசத்திய தென்காசி தம்பதிRahul gandhi vs Modi : ’’முன் அனுபவம் உள்ளதா?’’அம்பானி அதானியுடன் டீல்?மோடிக்கு ராகுல் பதிலடி!Sam Pitroda Resigns : இனவெறி கருத்தால் சர்ச்சை..காங். தலைவர் ராஜினாமா !வலுக்கும் கண்டனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
Lowest Score T20: டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Thadi Balaji: சாதித்து காட்டிய மாணவன் சின்னதுரை: ஓடோடி வந்த  நடிகர் தாடி பாலாஜி
Thadi Balaji: சாதித்து காட்டிய மாணவன் சின்னதுரை: ஓடோடி வந்த நடிகர் தாடி பாலாஜி
Rashmika Mandanna: ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
Embed widget