மேலும் அறிய

TN 12th Result 2024: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றமா?- வெளியான புதிய அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம் எதுவும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் தாமதமாக வெளியாகுமா என்று கேள்வி எழுந்த நிலையில், தாமதம் எதுவும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.

விடைத்தாள் திருத்தம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள், மார்ச் 23-ம் தேதி முதல் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை, 86 மையங்களில் திருத்துதல் பணிகள் நடைபெற்றன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன. 

எப்போது தேர்வு முடிவுகள்?

ஆண்டுதோறும் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவார். எனினும் தற்போது, நாடு முழுவதும்  மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூவுக்குக் கடிதம் அளிக்கப்பட்டது. இதற்கு ஆணையர் ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளன. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படிப் பார்ப்பது?

மாணவர்கள் 

www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in

ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் உடனே பதிவு செய்யுங்க
பக்தர்களே! காசி தமிழ் சங்கமத்திற்கு போக ரெடியா? இந்த இணையதளத்தில் பதிவு செய்யுங்க
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
Seeman : மீண்டும் வெள்ளித்திரையில் சீமான்! LIK படக்குழு வெளியிட்ட அப்டேட்.. குஷியில் தம்பிகள்
"வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ?   நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ? நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Embed widget