மேலும் அறிய

TN 10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எப்போது? முழு அட்டவணை இதோ!

10th Supplementary Exam Time Table 2023 Tamil Nadu: 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.  

தமிழ்நாடு முழுவதும் 9,14,320 மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று வெளியாகின. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். முன்னதாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 

78 ஆயிரம் பேர் தோல்வி

9,14,320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்தனர். 78,706 மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்த தேர்வில் பெரம்பலூர் (97.67% ),  சிவகங்கை (97.53%),  விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.  கடைசி இடம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு (83.54 %) கிடைத்துள்ளது. 

எத்தனை பேர் நூற்றுக்கு நூறு?

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. ஆங்கிலத்தில் 89 பேரும்,  கணிதத்தில் 3649 பேரும், அறிவியல் பாடத்தில் 3584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

இதனைத் தொடந்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன்படி மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.  


TN 10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எப்போது? முழு அட்டவணை இதோ!

ஜூன் 27ஆம் தேதி மொழித் தாளும் 28ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடமும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget