TAHDCO: இளைஞர்களே! அரசு வழங்கும் இலவச பயிற்சி: நாட்டுப்புறக் கலை, நாடகம், இலக்கியம், காட்சி கலைகளில் கலந்துகொள்ள அழைப்பு!
TAHDCO Free training: தாட்கோ சார்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கலை சார் சிறப்பு பயிற்சி பட்டறை அளிக்கப்பட உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
என்னென்ன கலைகள்?
நாட்டுப்புறக் கலைகள் Folk Arts
மண்ணுக்கும் மக்களுக்குமான ஆழமான உறவை, பாரம்பரிய இசைக் கருவிகளின் துடிப்போடு இசைத்து, நடனம் ஆடி மரபின் உயிரோட்டத்தை இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்து, கலாச்சாரத்தின் வேர்களைப் புதுப்பிக்கும்.
நாடகக் கலைகள் - Theatrical Arts
வாழ்க்கை கதைகளையும் சமூக உண்மைகளையும் மேடையேற்றி, சிந்தனைகளையும் உணர்வுகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்த்த இந்த நாடகக்கலை, இளைஞர்களுக்கு புதிய பாதை அமைத்துக்கொள்ள வழிவகுக்கும்.
இலக்கிய கலைகள் Literary Arts
இலக்கியத்தின் வழியே மனிதர் கண்ட வளர்ச்சியை, மொழியும் கவிதையும் எடுத்துரைத்தன. அந்த தொன்மையை இந்தக் கலைகள் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும், வழிநடத்தும்.
காட்சி கலைகள் Visual Arts
வண்ணங்களும் வடிவங்களும் இணைந்து மனித எண்ணங்களின் சிந்தனைகளை இணைக்கும் ஒரு பாலமாகும் இந்தக் கலை, இளைஞர்களின் கற்பனையை மேம்படுத்தும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை@CMOTamilnadu @mkstalin @Udhaystalin@mp_saminathan @MMathiventhan#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/Y8pCkd498I
— TN DIPR (@TNDIPRNEWS) September 16, 2025
எப்போது? எங்கே?
நாள் : 22,23,24 செப்டம்பர் 2025
இடம்: சென்னை வர்த்தக மையம்
பதிவு செய்ய
https://tahdco-registration-form.pages.dev/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.






















