மேலும் அறிய

Nutritional Status: அங்கன்வாடிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை; வசதிகள் இவைதான்: அதிர்ச்சி அறிக்கை..

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ உள்ள அங்கன்வாடி மையக் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ உள்ள அங்கன்வாடி மையக் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மக்கள் நல்வாழ்வு இயக்கம் & மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்:

திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ இருந்து மொத்தம்‌ 50 அங்கன்வாடி மையங்கள்‌ எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில்‌ 41 மையங்கள்‌ தென்காசி மாவட்டத்திலும்‌, 9 மையங்கள்‌ திருநெல்வேலி மாவட்டத்திலும்‌ செயல்பட்டு வருகின்றன. 2.5 - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்‌ 2022 செப்டம்பர்‌ மாதம்‌ 20 தேதி ஆய்வு தொடங்கப்பட்டது. பயிற்சி பெற்ற பணியாளர்கள்‌ குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில்‌ இருந்து தரவுகளை சேகரித்தது. அங்கன்வாடி பணியாளர்களுடன்‌ குழந்தைகளின்‌ வயதுக்கு ஏற்ற எடை, வயதுக்கு ஏற்ற உயரம்‌, உயரத்திற்கு ஏற்ற எடை என அளவீடு செய்து பதிவுசெய்யப்பட்டது.

உள்கட்டமைப்பு வசதிகளான கட்டிடம்‌, குடிநீர்‌, சமையலுக்கு பயன்படுத்தும்‌ தண்ணீர்‌, மின்சாரம்‌, தண்ணீர்‌ வசதியுடன்‌ கூடிய குழந்தைகள்‌ நல கழிப்பறை மற்றும்‌ சுற்றுச்சுவர்‌ உள்ளிட்டவை அங்கன்வாடி பணியாளர்களின்‌ உதவியுடன்‌ சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆய்வு முடிவில்‌ கண்டறியப்பட்டவை

838 குழந்தைகளிடம்‌ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில்‌ 432 பேர்‌ ஆண்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ 406 பெண்‌ குழந்தைகள்‌.

தேசிய குடும்ப நல ஆய்வு-5ன்‌ முடிவுகளுக்கும்‌, நமது ஆய்வு முடிவுகளுக்கும்‌ உள்ள வேறுபாடு.

* 9 மையங்களுக்குள்‌ குடிநீர்‌ வசதி இல்லை, 7 மையங்களில்‌ சமையல்‌ செய்வதற்கான தண்ணீர்‌ வசதி இல்லை.

* 2 மையங்களில்‌ மின்‌ இணைப்பு வசதி இல்லை.

* 3 மையங்கள்‌ வாடகை கட்டிடத்தில்‌ இயங்கி வருகின்றன.

* 7 மையங்களில்‌ போதிய விளையாட்டு பொருட்கள்‌ இல்லை.

* 37 மையங்களுக்கு சுற்றுச்சுவர்‌ இல்லை.

* 11 மையங்களில்‌ குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி, போதிய பாத்திரங்கள் இல்லை.

2.5- 5 வயது குழந்தைகளின்‌ சத்து மேம்பாட்டிற்கான பரிந்துரைகள்‌:

1. எடை குறைந்தவர்கள்‌, மெலிவுத்‌ தன்மையுடையவர்கள்‌ மற்றும்‌ உயரம்‌ குன்றியவர்களின்‌ முழு அளவிலான வளர்ச்சிக்காக சிறப்புப்‌ பார்வையுடன்‌ கூடிய திட்டங்களை அரசு செயல்படுத்திட வேண்டும்‌.

2. 2.5- 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும்‌ ஐசிடிஎஸ் திட்டத்தின்‌ கீழ்‌பதிவு செய்யப்பட்டு அளவிடப்பட வேண்டும்‌.

3. கடந்த ஜனவரி 2023 முதல்‌ குழந்தைகளுக்கு வழங்கப்படும்‌ இணை உணவின்‌ அளவு 1௦௦ கிராமிலிருந்து 500 கிராமாக குறைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி மற்றும்‌ பாலூட்டும்‌ தாய்மார்களுக்கு வழங்கப்படும்‌ இணைஉணவின்‌ அளவு 165 கிராமிலிருந்து 150 கிராமாக குறைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அனைத்து
குழந்தைகளுக்கும்‌, கர்ப்பிணிகளுக்கும்‌ இணை உணவு முன்பு போலவே வழங்கப்பட வேண்டும்‌.

4. அனைத்து குழந்தைகளுக்கும்‌ வளர்ச்சி மற்றும்‌ ஊட்டச்சத்து மதிப்பீடு ஒவ்வொரு மாதமும்‌ தாய்‌ முன்னிலையில்‌ செய்யப்பட வேண்டும்‌.

5. அங்கன்வாடி மையத்தில்‌ மதிய உணவருந்தும்‌ குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக ஒரு குழந்தைக்கு நாள்‌ ஒன்றுக்கு ரூ.1.60 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது சத்தான உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை. நாள்‌ ஒன்றுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும்‌ குறைந்தபட்சம்‌ ரூபாய்‌ 20 ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌.

6. வாரத்திற்கு ஒருநாள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ குழந்தைகள்‌ நல மருத்துவர்‌ பணியில்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌.

7. ஊட்டச்சத்து நிபுணர்‌ ஒருவர்‌ வட்டார அளவில்‌ பணியமர்த்தப்பட வேண்டும்‌.

8. வாழ்விடங்களுக்கு அருகில்‌ கிடைக்கும்‌ உணவு பொருட்களை வைத்தே, சத்தான உணவு பொருட்களை கொடுப்பதற்கான அணுகுமுறைகளில்‌ அரசு முனைப்பு காட்ட வேண்டும்‌.

9. மருத்துவ அலுவலர்‌, செவிலியர்‌, மருந்தாளுநர்‌, ஆய்வகப் பணியாளர்‌, கிராம சுகாதார செவிலியர்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்‌.

1௦. மகளிர்‌ நோய்‌ மற்றும்‌ மகப்பேறு பெண்‌ மருத்துவர்களை அதிகளவில்‌ பணியமர்த்த வேண்டும்‌.

11. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும்‌ ஸ்கேன்‌ கருவி, அறுவை சிகிச்சை கருவிகள்‌ மற்றும்‌ இரத்த அழுத்தப் பரிசோதனை கருவி வழங்கப்பட வேண்டும்‌.

12. அங்கன்வாடி செல்லும்‌ குழந்தைகள்‌ அனைவருக்கும்‌ மருத்துவ ஆய்வு அட்டை வழங்கி அவர்களை அங்கன்வாடி மையம்‌ முதல்‌ ஆரம்ப பள்ளி செல்லும்‌ வரை தொடர்‌ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்‌.

13. ஒவ்வொரு மாதமும்‌ வளரிளம்‌ பெண்களுக்கு RKSK மருத்துவ குழுவினர்‌ பள்ளிகளிலும்‌ VHN  கிராமங்களிலும்‌ வழிகாட்டுதல்‌ கூட்டங்களை நடத்தி சரிவிகித உணவின்‌ அவசியத்தை தெளிவுபடுத்துவதுடன்‌, தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்‌ மற்றும்‌ மாதவிடாய்‌ அதன்‌ நலன்‌ சார்ந்த புரிதலை தன்சுத்தம்‌ பேணல்‌ அவசியம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌.

14. RKSK மருத்துவ குழுவினர்‌ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அங்கன்வாடி குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்யும்‌ நடைமுறையினை மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும்‌ விதமாக அரசு நிர்வாக நடைமுறை மாற்றம்‌ செய்ய வேண்டும்‌.

15. ஊட்டச்சத்து வாரம்‌, குழந்தைகள்‌ தினம்‌, குழந்தை உரிமை நாள்‌, அங்கன்வாடி தினம்‌ போன்ற தினங்களை அனைத்து மையங்களும்‌ கடைபிடிப்பதுடன்‌, தாய்மார்கள்‌, பொதுமக்கள்‌ மற்றும்‌ தேர்ந்ததெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின்‌ பங்கேற்புடன்‌ நடத்தப்பட வேண்டும்‌.

16. அங்கன்வாடி மைய பணியாளர்கள்‌ கிராம சபை கூட்டத்தில்‌ பங்கேற்று அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள்‌ மேம்படுத்துவது குறித்து குழந்தைகளின்‌ பெற்றோர்கள்‌ கலந்து கொண்டு முன்வைக்கப்படும்‌ கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிதி உதவி செய்து செயல்படுத்த
வேண்டும்‌.

17. அனைத்து மையங்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்‌ கீழ்‌ உடனடியாக குடிநீர்‌ வசதி செய்து தர வேண்டும்‌.

18. அங்கன்வாடி மேலாண்மை குழு உருவாக்கி மாதம்‌ ஒருமுறை கூடி மையங்களில்‌ இருக்கும்‌ பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காண வேண்டும்‌.

19. அங்கன்வாடி மைய பணியாளர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்‌.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வு இயக்கம் & மனித உரிமை கல்வி மற்றும் காப்பு கள அமைப்பு தெரிவித்துள்ளது. 

பசி மற்றும்‌ ஊட்டச்‌ சத்து குறைபாட்டிலிருந்து விடுதலை பெறுவது மனிதனின்‌ அடிப்படை உரிமையாகும்‌. மேலும்‌ அவற்றைப்‌ போக்குவது மனித குல மேம்பாட்டிற்கும்‌ தேசிய வளர்சிக்கும்‌ மிகவும்‌ அடிப்படையானதாகும்‌. இந்தியாவில்‌ குழந்தைகளின்‌ ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டைச்‌ சமாளிப்பதற்கான மிக முக்கியமான கருவி ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ (ICDS) ஆகும்‌. இத்திட்டத்தின்‌ மூலம்‌ குழந்தைகள்‌ முழுப்‌ பயனைப்‌ பெறசமூகம்‌ மற்றும்‌ சமூகம்‌ சார்ந்த அமைப்புகள்‌ அரசாங்கத்துடன்‌ கைகோர்க்க வேண்டும்‌. அங்கன்வாடி மையங்கள்‌ முழுமையாகச்‌ செயல்படுவதோடு ஒவ்வொரு குழந்தையின்‌
வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்‌ பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget