School Reopen: முடிந்தது அரையாண்டு விடுமுறை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. ஸ்கூலுக்கு போங்க குழந்தைகளா!
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி நடத்த திட்டமிடப்பட்டது ஆனால் 4 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வளி மண்டல் சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. இதனால் திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் இருந்து மீள்வதற்கு சுமார் ஒரு வார காலம் ஆனாது. இரு சில பகுதிகள் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்வது கூட கடும் சிரமமாக இருந்தது. தமிழ்நாடு அரசு, பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு துறையினர், இந்திய ராணுவம் என அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு பணிகள் மேற்கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 6000 நிவாரனம் வழங்கப்பட்டு வருகிறது.
கடுமையான மழையால அங்கு இருக்கும் பெருமபாலான பள்ளிகள் தண்ணீரால் சூழப்பட்டது. மாணவ மாணவிகள் தங்களது புத்தங்கள் உட்பட அனைத்தும் இழந்து தவித்தனர். இந்த கடும் மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு சில பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் நடத்த முடியாமல் போனது. மேலும் அரையாண்டு விடுமுறையும் நெருங்கியதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அதாவது நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (டிசம்பர் 2 ஆம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட உள்ளது. வரலாறு காணத மழை பதிவான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் விடுப்பட்ட தேர்வுகள் வருகிற 4 ஆம் தேதி முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட பள்ளகல்வித்துறை மேற்கொண்டு உள்ளது.
இந்த சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளிகள் தரப்பில் மேற்கொள்ள வேண்டும் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.