மேலும் அறிய

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; ரூ.10,000 ரொக்கப்பரிசு- முழு விவரம்!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர்  கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும்  சமூகச் சிந்தனைகளையும்  இளைய தலைமுறையினரிடம்  கொண்டு  சேர்க்கும்  வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

அதற்கிணங்க பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 15.09.2022, 17.09.2022 ஆகிய நாள்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
    
பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்
1. முதல் பரிசு-  ரூ.5000
2. இரண்டாம் பரிசு- ரூ.3000
3. மூன்றாம் பரிசு- ரூ. 2000 என்ற வகையில் வழங்கப்படும்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் இருந்து இருவர் மட்டும் தேர்வு  செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் தனியே வழங்கப்பெறும்.

பள்ளி மாணவர்களுக்கு- பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பேச்சுப் போட்டி நாள்: 15.09.2022, 17.09.2022

பேரறிஞர் அண்ணா பேச்சுப் போட்டி தலைப்புகள்
    
1. தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன்
2. மாணவர்களுக்கு அண்ணா
3. அண்ணாவின் மேடைத்தமிழ்
4. அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
5. அண்ணாவின் வாழ்விலே!    

தந்தை பெரியார் பேச்சுப் போட்டி தலைப்புகள்

1. பெண்ணடிமை  தீருமட்டும்
2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே
3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்
4. பெரியாரின் உலக நோக்கு.    

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; ரூ.10,000 ரொக்கப்பரிசு- முழு விவரம்!

பள்ளிகளுக்கான போட்டிகள் வட சென்னையில் அரசு உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கத்திலும் தென் சென்னையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அசோக்நகர், சென்னை-5லும், மத்திய சென்னையில் செயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னையிலும் நடைபெறுகின்றன.  

நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
 
கல்லூரி  மாணவர்களுக்கு

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பேச்சுப் போட்டி நாள் : 15.09.2022, 17.09.2022

தலைப்புகள்:
 
பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டி   

1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்
2. அண்ணாவின் மனிதநேயம்
3. அண்ணாவின் தமிழ் வளம்
4. அண்ணாவும் தமிழ்ச் சமுதாயமும்
5. அண்ணாவின் அடிச்சுவட்டில்    

தந்தை பெரியார் பேச்சுப்போட்டி    

1. பெண் ஏன் அடிமையானாள் ?
2. இனிவரும் உலகம்
3. சமுதாய விஞ்ஞானி பெரியார்
 4. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்
5. பெரியார் காண விரும்பிய சமூகநீதி
6. மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார்.    

கல்லூரிப்போட்டிகள் வட சென்னையில் அம்பேத்கர் கலைக் கல்லூரி வியாசர்பாடியிலும்  தென் சென்னையில் ராணிமேரி கல்லூரி, சென்னையிலும்   மத்திய சென்னையில் பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே, சென்னையிலும் நடைபெறுகின்றன.  

நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget