மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் / தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் / தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாறு ஆராய்ச்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் / தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடம் இருந்து சென்னை, எழும்பூர், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கு மாதாமாதம் ரூ.10 ஆயிரம் ஆராய்ச்சிக்கான உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவணக் காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்குப் பயனளிக்கக்சகவடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்திக் கொள்வதற்கும். தமிழ் நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக் கொணர்வதற்கும் உதவுவதாகும்.
செப்டம்பர் 3 கடைசி
விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவம் ஆகியவற்றை https://tamilnaduarchives.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம் ௦3.09.2024, மாலை 05.00 மணி.
இவ்வாறு தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் https://drive.google.com/file/d/1jeZ6nkX7jiCo06MAQ5rdsvWEQDUz-bIM/view என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல https://drive.google.com/file/d/1GBP1KBSE5fTAGQm4eeO2QzBiU37oJG3O/view என்ற இணைப்பில், விண்ணப்பிப்பதற்கான விவரம், தகுதி, மாத உதவித்தொகை, விதிமுறைகள், ஆராய்ச்சிக்கான துறைகள் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://tamilnaduarchives.tn.gov.in/
தொலைபேசி எண்: 044-28190355 | 28190855
இ-மெயில் முகவரி: cmr.tnahr@tn.gov.in | tnarchives_rh@nic.in