மேலும் அறிய

பாடப்புத்தகம் மட்டுமே போதாது! நூலகத்திலும் இனி பள்ளி மாணவர்கள் - அமைச்சர் தொடங்கிய புதிய திட்டம்!

பள்ளிகளில்‌ வாசிப்பு இயக்கம் என்னும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

பள்ளிகளில்‌ வாசிப்பு இயக்கம் என்னும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

பள்ளிகளில்‌ வாசிப்பு இயக்க தொடக்க விழா குறித்து பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தெரிவித்துள்ளதாவது:

’’மாணவர்களிடையே புத்தகம்‌ வாசிக்கும்‌ பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில்‌ நூலகங்கள்‌ செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும்‌ நூலகப்‌ பாடவேளை வாரமொரு முறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைகளைப் பயன்படுத்தி மாணவர்கள்‌ தங்கள்‌ வாசிப்புத்‌ திறனையும்‌ படைப்புத்‌ திறனையும்‌ வளர்த்துக்‌ கொள்வதற்கு தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌துறை திட்டங்களைத் தீட்டியுள்ளது.

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும்‌ உள்ள மாணவர்கள்‌ 6-8, 9-10, 11-12 என மூன்று பிரிவுகளாகப்‌ பிரிக்கப்படவேண்டும்‌. அனைத்து மாணவர்களுக்கும்‌ நூலகத்தில்‌ உள்ள நூல்களிலிருந்து வாரம்‌ ஒன்று வழங்கப்படவேண்டும்‌. அவர்கள்‌ அதை வீட்டுக்கும்‌ எடுத்துக்கொண்டு போகலாம்‌. அதை வாசித்து முடித்தவுடன்‌ நூலகத்தில்‌ திருப்பித்‌ தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம்‌. 

படித்த நூல்‌ குறித்து விமர்சனம்‌ எழுதலாம்‌. அதை வைத்து ஓவியம்‌ வரையலாம்‌. நாடகம்‌ நடத்தலாம்‌. கலந்துரையாடல்‌ செய்யலாம்‌. நூல்‌ அறிமுகம்‌, புத்தக ஒப்பீடு, மேற்கோள்கள்‌ குறிப்பிடுதல்‌, கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல்‌, புத்தகம்‌ தன்‌ கதை கூறுதல்‌ மற்றும்‌ குறு ஆய்வுக்‌ கட்டுரை சமர்ப்பித்தல்‌
என மாணவர்களின்‌ இது போன்ற படைப்புகள்‌ பள்ளிகளில்‌ சேகரித்து வைக்கப்படும்‌.

இவற்றில்‌ சிறந்த படைப்புகளைத்‌ தந்த மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில்‌ பங்கெடுக்க வைக்கப்படுவர்‌. அதில்‌ வெல்பவர்கள்‌ மாவட்டப்‌ போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்‌. மாவட்ட அளவில்‌ வெல்பவர்கள்‌ மாநில அளவில்‌ நடத்தப்படும்‌ முகாமில்‌ கலந்துகொண்டு போட்டிகளில்‌ பங்கெடுக்கலாம்‌.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ 3 பேர்‌ என்கிற வகையில்‌ 114 பேர்‌ சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நடக்கவிருக்கும்‌ முகாமில்‌ பங்கேற்பார்கள்‌. இம்முகாமில்‌ தலைசிறந்த பேச்சாளர்கள்‌ மற்றும்‌ எழுத்தாளர்களைக்‌ கொண்டு அமர்வுகள்‌ ஏற்பாடு செய்யப்படும்‌. இந்நாட்களில்‌ குழந்தை எழுத்தாளர்களுடன்‌ மாணவர்கள்‌ உரையாடும் வாய்ப்பும்‌ ஏற்படுத்தப்படும்‌. மேலும்‌, மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும்‌ அவர்களின்‌ புத்தக அனுபவப்‌ பகிர்வுகளும்‌ நடைபெற இருக்கின்றன.

முகாமில்‌ கலந்துகொண்டவர்களுக்கு இடையில்‌ நடக்கும்‌ இப்போட்டியில்‌ வெல்வோர்‌ 'அறிவுப்‌ பயணம்'‌ என்கிற பெயரில்‌ வெளிநாட்டுச்‌ சுற்றுலாவுக்குச்‌ செல்ல வாய்ப்பளிக்கப்படும்‌. இந்தப்‌ பயணத்தில்‌ உலகப்‌ புகழ்பெற்ற நூலகங்கள்‌, ஆவணக்‌ காப்பகங்கள்‌ போன்றவற்றைக்‌ காணலாம்‌.

இந்தத்‌ திட்டத்தை, இன்று (17.8.2022) காலை 9:30 மணிக்கு பள்ளிக்‌ கல்வித்‌துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி திருச்சிராப்பள்ளியில்‌ உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடக்கும்‌ நிகழ்வில்‌ தொடங்கிவைத்தார்.

பள்ளி நூலகங்களையும்‌ பாடவேளைகளையும்‌ முறையாகப்‌ பயன்படுத்தவும்‌, அவற்றின்‌ பயன்பாடு மாணவர்களை நன்கு சென்றடையவும்‌ பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல்‌ முறையாக மாணவர்கள்‌ ஏற்றுக்கொள்வதை இலக்காகக்‌ கொண்டு செயல்படவும்‌ நூலக பாடவேளைகளையும்‌ மற்றும்‌ பள்ளி நூலகங்களை முறையாகப்‌ பயன்படுத்திடவும்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தெரிவித்துள்ளார். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget